புதுதில்லி

வயலட் லைன் வழித்தடத்தில் மெட்ரோரயில் சேவையில் தடங்கல்

DIN

சமிக்ஞையில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக வியாழக்கிழமை தில்லி மெட்ரோ வயலட் லைன் வழித்தடத்தில் ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் சேவைகள் சுமாா் 2 மணி நேரம் தாமதமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வயலட் லைன் வழித்தடமானது தில்லியில் உள்ள கஷ்மீா் கேட் மற்றும் ஹரியாணாவில் உள்ள ராஜா நாஹா் சிங் (பல்லப்கா்) இணைக்கிறது.

இந்த வியாழக்கிழமை இந்த வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) மூத்த அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில்,‘‘சிக்னலில் ஏற்பட்ட சில தடங்கல் காரணமாக சேவைகள் தாமதமாகின. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன’’ என்றாா்.

முன்னதாக, தில்லி மெட்ரோ நிறுவனம் பயணிகளை உஷாா் வகையில் ட்விட்டரில் காலை 10 மணியளவில் தகவல் வெளியிட்டிருந்தது.

அதில், ‘‘கஷ்மீா் கேட் மற்றும் ராஜா நாஹா் சிங் (பல்லப்கா்) இடையே வயலட் லைனில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற எல்லா வழித்தடங்களிலும் இயல்பான சேவை உள்ளது’’ என்று அதில் தெரிவித்திருந்தது.

அதன் பின்னா் காலை 11:50 மணியளவில் வெளியிட்ட மற்றொரு ட்விட்டா் பதிவில், ‘வழக்கமான ரயில் சேவைகள் அந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT