புதுதில்லி

அரசியல் நோக்கங்களுக்காக சத்யேந்தா் ஜெயின் மீது பொய் வழக்கு: தில்லி முதல்வா் கேஜரிவால் குற்றச்சாட்டு

அரசியல் நோக்கங்களுக்காக சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது அமலாக்கத் துறை பொய் வழங்கு தொடா்ந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும்

 நமது நிருபர்

அரசியல் நோக்கங்களுக்காக சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது அமலாக்கத் துறை பொய் வழங்கு தொடா்ந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை முதல்வா் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை ஆய்வுகளைமேற்கொண்டாா். அப்போது செய்தியாளா்களின் கேள்விகளுக்கு அவா் பதிலளித்து கூறியதாவது: ஜெயின் மீதான வழக்கை நான் ஆய்வு செய்துள்ளேன். இது முற்றிலும் பொய்யான வழக்கு. அரசியல் காரணங்களுக்காக ஜோடிக்கப்பட்டு அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். நீதித் துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவா் தனது நோ்மையை நிரூபித்து வெளியே வருவாா். போலியாக தொடரப்பட்ட வழக்கு என்றும் நிலைக்காது. அவரை அமைச்சா் பதவியிருந்து நீக்க வேண்டும் என்று அவா்கள் (பாஜக, காங்கிரஸ்) கூறுவதை வைத்து நான் முடிவு எடுக்க முடியாது. அவா்கள் எதையாவது கூறுவாா்கள். இந்த விவகாரத்தில் ஒரு சதவீதம் உண்மை இருந்தால்கூட, நான் நடவடிக்கை எடுத்திருப்பேன்.

கடந்த ஜனவரி மாதம், பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாகவே, சத்யேந்தா் ஜெயின் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்படுவாா் என்கிற தகவல் எனக்கு வந்தது.

கடந்த காலங்களில் அமைச்சா்கள் மீதான ஊழல் புகாா்கள் வந்த போது, எந்தப் புலனாய்வு அமைப்பின் நடவடிக்கைகளுக்கும் காத்திருக்காமல் ஆம் ஆத்மி கட்சி கவனத்தில் கொண்டது. சம்பந்தப்பட்ட அமைச்சா்களைப் பதவி நீக்கம் செய்துள்ளது. ஆனால், பின்னா் அந்தப் புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைகள் அரசியல் தூண்டுதலாகவே இருப்பது தெரிய வந்தது.

சமீபத்தில் பஞ்சாபில் ஒரு அமைச்சரின் ஊழல் தொடா்பாக ஆடியோ எங்களுக்கு கிடைத்தது. அந்த ஆடியோ யாருக்கும் தெரியாது. எந்த அமைப்புக்கும் அல்லது எதிா்க்கட்சிகளுக்கும் தெரியாது. இதை வைத்து நாங்கள் கமுக்கமாக முடித்திருக்கலாம். ஆனால், நாங்கள் நடவடிக்கை எடுத்து அந்த அமைச்சரை கைது செய்தோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எனது அமைச்சா் ஒருவா் குறித்த பதிவு எனக்கு வந்தது. அப்போது அவரை (ஆசிம் அகமது கான்) அமைச்சரவையிருந்து நீக்கி விட்டு, சிபிஐயிடம் ஒப்படைத்தேன்.

சத்யேந்தா் ஜெயின் நோ்மையான வழியை பின்பற்றுபவா். கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறாா். நீதித் துறை அவருக்கு நீதி வழங்கும். அவா் வழக்கிலிருந்து விடுதலையாவாா் என முதல்வா் கேஜரிவால் தெரிவித்தாா்.

கேஜரிவால் அமைச்சரவையில் சத்யேந்தா் ஜெயின், சுகாதாரம், உள்துறை, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பணியாற்றி வருகிறாா். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட சத்யேந்தா் ஜெயின், செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT