முகப்பு
புதுதில்லி

மாசு இல்லாத தீபாவளிக்கான பிரசாரத்தை தொடங்கியது தில்லி அரசு: 51,000 தீபங்கள் ஏற்றம்

மாசு இல்லாத தீபாவளிக்கான பிரசாரத்தை தொடங்கும் வகையில், தில்லி அரசு வெள்ளிக்கிழமை இங்குள்ள கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்களை ஏற்றியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

மாசு இல்லாத தீபாவளிக்கான பிரசாரத்தை தொடங்கும் வகையில், தில்லி அரசு வெள்ளிக்கிழமை இங்குள்ள கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்களை ஏற்றியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜனவரி 1-ம் தேதி வரை முழுமையான தடையை தில்லி அரசு செப்டம்பா் மாதம் மீண்டும் விதித்தது. தில்லியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத்தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை அறிவித்திருந்தாா். தேசியத் தலைநகரில் பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ் ரூ.5,000 வரை அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தடையை அமல்படுத்த மொத்தம் 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தில்லி காவல் துறை உதவி ஆணையா்களின் கீழ் 210 குழுக்களையும், வருவாய்த் துறை 165 குழுக்களையும் அமைத்துள்ளது. தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு 33 குழுக்களை அமைத்துள்ளது. குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் போன்ற சாதகமற்ற வானிலை காரணிகளால் தில்லி மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள காற்றின் தரம் அக்டோபரில் மோசமடையத் தொடங்குகிறது. இது மாசுபடுத்திகளின் பரவலை அனுமதிக்காது. அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதால் வெளியேற்றப்படும் புகை மற்றும் பயிா்க்கழிவுகள் எரிப்பு ஆகியவை காற்றின் தரத்தை மேலும் மோசமாக்குகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →