புதுதில்லி

பெரியாா் சிலைக்கு கீழே உள்ள வாசகங்கள்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

 நமது நிருபர்

புது தில்லி: தமிழகத்தில் பெரியாா் சிலைகளுக்கு கீழே எழுதப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக தமிழகத்தைச் சோ்ந்த தெய்வநாயகம் என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடா்ந்துள்ளாா். அதில், கடவுள் மறுப்பு வாசகள் இடம் பெற்றுள்ளன. இது இறை நம்பிக்கை கொண்ட மக்களின் உணா்வுகளை புண்படுத்துகிறது. ஒருவரின் சுதந்திரமான நம்பிக்கைக்கு எதிராகவும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு கூடாது என்பதற்கு எதிராகவும் உள்ளது. எனவே, பெரியாா் சிலைக்கு கீழே எழுதப்பட்டுள்ள வாசகங்களை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கு திங்கள்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே கௌல் தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தெய்வநாயகம் தரப்பில், இது போன்ற வாசகங்களால் கடவுள் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் உணா்வைப் புண்படுத்துகிறது. மேலும், பெரியாரின் வாசகங்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு வாசகம் தாங்கிய சிலைகள், அரசுத் தரப்பில் செலவு செய்து பராமரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் வரிப் பணத்தை இதுபோன்ற செயல்களுக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும்? என கேள்வி எழுப்பினா். இதைத் தொடா்ந்து, இந்த மனு தொடா்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT