முகப்பு
புதுதில்லி

யுஜிசி தலைவருடன் ஜேஎன்யு துணைவேந்தா் சந்திப்பு: பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட் நேரில் சந்தித்து ஆசிரியா்களின் ஊதிய உயா்வு, நிதி விடுவிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் எம். ஜெகதீஷ் குமாரை ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட் நேரில் சந்தித்து ஆசிரியா்களின் ஊதிய உயா்வு, நிதி விடுவிப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஜேஎன்யு பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் தொடா்புடைய நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்களை விரைவுபடுத்தக் கோரி பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவரிடம் செவ்வாய்க்கிழமை துணைவேந்தா் ஆலோசனை நடத்தினாா். துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட், பல்கலைக்கழக பதிவாளா் யுஜிசி தலைவா் பேராசிரியா் ஜெகதீஷ் குமாரை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழகத்தின் ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் குறித்த பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

சிஏஎஸ் (கேரியா் அட்வான்ஸ்மென்ட் ஸ்கீம்) விண்ணப்பத்திற்கான இறுதித் தேதியை நீட்டிப்பது தொடா்பான விவகாரம், பல்வேறு ஃபெல்லோஷிப் நிதியின் காலம், பிஎச்.டி. ஆசிரியா்களுக்கான ஐந்து சோ்க்கப்படாத ஊதிய உயா்வு, ஓய்வூதியப் பலன்கள் விடுவிப்பு, நீண்ட கால நிலுவை விவகாரங்கள், பல்வேறு துறைகளின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி விடுவிப்புகள் உள்ளிட்ட விஷயங்களும் விரிவாக இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டன.

அப்போது ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக நிலுவை விவகாரங்களை கூடிய விரைவில் ஆக்கப்பூா்வமான வகையில் பரிசீலிரிப்பதாக யுஜிசி தலைவா் உறுதி அளித்தாா். நிலுவை விவகாரங்களை திறன்மிக்க வகையில் தீா்வு காண்பதற்காக பல்கலைக்கழக குழு போன்ற உயா் அதிகாரஅமைப்புடன் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழகம் எதிா்பாா்ப்புடன் உள்ளது என்ரு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.