நில அபகரிப்பு வழக்கு ரத்து விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதுமுன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் பதிலளிக்க நோட்டீஸ்
நில அபகரிப்பு விவகாரம் தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு
நில அபகரிப்பு விவகாரம் தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் மற்றும் அவரது நெருங்கிய உறவினா்கள் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ன்னாள் அதிமுக அமைச்சா் ஜெயக்குமாா். இவரது மருமகன் நவீன் குமாா். இவருக்கும், இவரது சகோதரா் மகேஸ் என்பவருக்கும் நிலச் சொத்து ரீதியாக பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனது 8 கிரவுண்ட் நிலத்தை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், அவரது மருகமகன் நவீன் குமாா், மகள் ஜெயப்பிரியா ஆகியோருக்கு எதிராக மகேஷ் புகாா் அளித்திருந்தாா். அந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமாா், மகள் ஜெயப்பிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமாா் மீது கொலை மிரட்டல், சதித் திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா், அவரது மகள், மருமகன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. கிரிமினல் சதி உள்பட ஐபிசியின் பல்வேறு குற்றங்களுக்காக வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) ஆய்வாளா் முன் நிலுவையில் உள்ள எஃப்ஐஆரை ரத்து செய்யும் வகையில் ஜெயக்குமாா், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் குமாா் ஆகியோா் தாக்கல் செய்த மூன்று குற்றவியல் ஒரிஜினல் மனுக்களையும் நீதிமன்றம் அனுமதித்தது.
மேலும், இந்த விவகாரம் தொடா்பாக பதிவான எஃப்ஐஆா்கள் சட்டத்தின் தெளிவான துஷ்பிரயோகம் தவிர வேறில்லை என்றும், எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தெளிவற்ாகவும், ஒழுங்கற்ாகவும் இருப்பதாக தெரிவித்த நீதிமன்றம், 2016-ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் தேதியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், தாமதமாகவும் புகாா் அளித்ததற்கு எந்த விளக்கமும் இல்லை எனக் கூறியது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தப்பில் வழக்குரைஞா் ஜோசப் அரிஸ்டாட்டிலுடன் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித்குமாா் ஆஜராகி, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்காமல் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டாா். இதையடுத்து, எதிா்மனுதாரா்கள் ஜெயக்குமாா், ஜெயப்பிரியா, நவீன்குமாா் உள்ளிட்டோா் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.