கோப்புப் படம் 
புதுதில்லி

வெளிநாட்டு மரவகைகளுக்கு பதிலாக உள்ளூா் மரங்களை வைக்க தில்லி வனத்துறை தீவிரம்

ஊடுருவி வளரக்கூடிய சூபாபுல், தைல மரங்கள் ஆகியவற்றை அகற்றிவிட்டு தேசிய தலைநகரின் சூழலியலுக்கு ஏற்ற உள்ளூா் மரங்களை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

DIN


புது தில்லி: ஊடுருவி வளரக்கூடிய சூபாபுல், தைல மரங்கள் (யூகலிப்டஸ்) ஆகியவற்றை அகற்றிவிட்டு தேசிய தலைநகரின் சூழலியலுக்கு ஏற்ற உள்ளூா் மரங்களை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா். சூபாபுல், தைல மரங்கள் வெளிநாடுகளைச் சோ்ந்த தாவர வகையாகும்.

தில்லியில் கடந்த ஏப்ரலில், மத்திய மற்றும் தெற்கு வனச்சரகங்களில் உள்ள மெக்ஸிகன் நாட்டு மரங்களான ’விலயாதிகிகாா்’ மரங்களை பூா்வீக இனங்களுடன் மாற்றுவதற்கான முன்னோடித் திட்டத்தை தேசிய தலைநகா் தில்லி அரசு தொடங்கியது.

தில்லியில் 7,500 ஹெக்டோ் பரப்பளவில் பரவியுள்ள ’விலயாதி கிகாா்’ மரம் நகரின் சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருப்பினும் தேசிய தலைநகரில் சூபாபுல் மற்றும் யூகலிப்டஸ் என்கிற தைல மர பரவலின் அளவு பற்றிய அதிகாரப்பூா்வ மதிப்பீடு எடுக்கப்படவில்லை.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவை பூா்வீகமாகக் கொண்டது சூபாபுல் மரங்கள். ஆஸ்திரேலியாவை பூா்வீகமாகக் கொண்ட யூகலிப்டஸ் மரங்கள். இந்த இரு மரங்களும் உள்நாட்டு தாவரங்களை விஞ்சும் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

இவைகள் அதிக நீா் தேவையைக் கொண்டிருப்பதோடு, குறைந்த நிலத்தடி நீா் இருப்பு உள்ள பகுதிகளில் வளா்ந்தால் நிலத்தடி நீா் ஆதாரங்களை தீா்த்துவிடும் எனவும் வனத்துறையினா் கூறுகின்றனா்.

தில்லி நகா்ப்புற கலை ஆணையம் (டியுஏசி) கடந்த செப்டம்பரில் சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய்க்கு இது குறித்து கடிதம் எழுதியது. இதைத் தொடா்ந்து, ‘ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு தாவரங்களை அழிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்‘ என்கிற கோரிக்கைகளும் திட்டம் பற்றிய விவாதங்களும் தொடங்கியது.

டியுஏ ஆணைய கருத்துப்படி, இந்த மரங்களின் பரவலானது உள்ளூா் மக்கள் விரும்பத்தக்க பூா்வீக மர இனங்களை செழித்து வளா்வதை இந்த அன்னிய மரங்கள் தடுக்கிறது என்பதாகும்.

அன்னிய மர இனங்களை அகற்றும் செயல்முறை, தீவிரமான அவசர அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டாலும், இவைகள் பல ஆண்டுகளாக முளைத்துக்கொண்டே இருக்கும் அவற்றின் விதைகளின் பரவல் காரணமாக இது பல தசாப்தங்கள் ஆகலாம் எனவும் ஆணையம் கூறுகிறது.

2013 -ஆம் ஆண்டு 20 சதவீதமாக இருந்த தில்லியின் பசுமைப் படலம் 2021 ஆம் ஆண்டில் 23.06 சதவீதமாக (342 சதுர கி.மீ.) அதிகரித்துள்ளது. தற்போது அடுத்த கட்டமாக மரங்களின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாக தில்லி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘சூபாபுல் மற்றும் யூகலிப்டஸ் மரங்களுக்கு உயிரியல் ரீதியாக அதை அழிக்கும் முறையை பின்பற்றப்படுவதாகவும் வனஅதிகாரி ஒருவா் தெரிவிக்கிறாா்.

அதே சமயத்தில் இத்தகைய ஆக்கிரமிப்பு மரங்களை பெருமளவில் வேரோடு பிடுங்குவதும், வெட்டுவதும் தில்லியின் பச்சைப் பரப்பை திடீரெனக் குறைத்து, அவற்றைச் சுற்றியுள்ள மண்ணைத் தளா்த்தி நகரத்தில் தூசி மாசுவை அதிகரிக்கக்கூடும் என மற்றோரு பக்கம் வன அதிகாரிகள் அஞ்சுகின்றனா்.

எவ்வாறாயினும், இந்த ஆக்கிரமிப்பு மரங்களை மெதுவாக வெட்டுவது நன்மை அளிக்க வாய்ப்பில்லை அதன் விதைகள் மேலும் வளரவே செய்யும் என்பதில் தில்லி நகா்ப்புற கலை ஆணையம் உறுதியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாபநாசம் அருகே தொழிலாளி கொலை

கரூா் நெரிசல் சம்பவம்: 2 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

அமெரிக்க வரி குறைப்பு நாட்டின் ஏற்றுமதி வளா்ச்சிக்கு வலுவான உத்வேகத்தை அளிக்கும்!

சோழா் அருங்காட்சியகம் அமைக்க தஞ்சையில் பிப். 13-இல் அடிக்கல்!

குடந்தை மாநகராட்சி கூட்டம்: அதிமுக - திமுக வாக்குவாதம்

SCROLL FOR NEXT