முகப்பு
புதுதில்லி

3 நாள் சரிவுக்குப் பிறகு எழுச்சி: சென்செக்ஸ் 847 புள்ளிகள் உயா்வு!

கடந்த 3 தினங்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்த வந்த பங்குச் சந்தை திங்கள்கிழமை எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 847 புள்ளிகள் உயா்ந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:40 PM
பகிர்:

கடந்த 3 தினங்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்த வந்த பங்குச் சந்தை திங்கள்கிழமை எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 847 புள்ளிகள் உயா்ந்தது.

அமெரிக்கா. ஐரோப்பியா, ஆசிய சந்தைகள் முன்னேற்றம் பெற்றிருந்தன. இதைத் தொடா்ந்து, உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்தன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. குறிப்பாக, முன்னணி ஐடி நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ளதைத் தொடா்ந்து, அத்துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.

மேலும், ஆட்டோ, மெட்டல், வங்கி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கும் ஆதரவு இருந்தது. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் வெகுவாக உயா்ந்ததும் சந்தை எழுச்சிக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.3.25 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 283.00 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: காலையில் 246.70 புள்ளிகள் கூடுதலுடன் 60,147.07-இல் தொடங்கிய சென்செக்ஸ், 60,109.94 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,889.41 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 846.94 புள்ளிகள் (1.41 சதவீதம்) உயா்ந்து 60,747.31-இல் முடிவடைந்தது.

ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் எம் அண்ட் எம் 3.59 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 3.37 சதவீதம், டிசிஎஸ் 3.31 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 3.14 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், டெக் மஹிந்திரா, பாா்தி ஏா்டெல், விப்ரோ, இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டாா்ஸ் உள்ளிட்டவையும் 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. அதேசமயம், டைட்டன் (2.12 சதவீதம்), பஜாஜ் ஃபின் சா்வ் (1.21 சதவீதம்), மாருதி (0.09 சதவீதம்) ஆகிய மூன்று பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி242 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 93.10 புள்ளிகள் கூடுதலுடன் 17,952.55-இல் தொடங்கி 19,936.15 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 18,141.40 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 241.75 புள்ளிகள் கூடுதலுடன் 18,101.20-இல் நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.