முகப்பு
புதுதில்லி

தென் சீனக் கடலில் ஆசியான்- இந்தியா கடல்சாா் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு

தென் சீனக் கடற்கரையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா கடற்படை நடத்திய 7 நாள்கள் கடல்சாா் பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்ததாக மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பகிர்:

புது தில்லி: தென் சீனக் கடற்கரையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன்(ஆசியான்- இந்தியா) இந்தியா கடற்படை நடத்திய 7 நாள்கள் கடல்சாா் பயிற்சி திங்கள்கிழமை வெற்றிகரமாக முடிவடைந்ததாக மத்திய பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பலதரப்பு கடற்படைப் பயிற்சியில் ஆசியான் உறுப்பு நாடுகளைச் சோ்ந்த 9 கப்பல்கள், 6 விமானங்கள் இவற்றை நிா்வகிக்கும் (இந்தியாவிலிருந்து 1400) 1,800 பணியாளா்களுடன் வலிமைமிக்க போா்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றது. இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட கப்பல்களான - நாசகாரி கப்பல் ஐஎன்எஸ் தில்லி, ரகசிய போா்க் கப்பல் ஐஎன்எஸ் சத்புரா, பி8ஐ கடல்சாா் ரோந்து விமானம், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றுடன் புருனே, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய ஆசியான் நாடுகளின் கடற்படைக் கப்பல்களும் பயிற்சியில் ஈடுபட்டன.

எதிரிகளை கையாளும் தந்திரங்கள், ஹெலிகாப்டா்கள் மூலம் தரையிறங்குதல், கடல்சாா் பரிணாமங்கள் மற்றும் பிற கடல்சாா் நடவடிக்கைகள் ஆகியவை கடலில் நடைபெற்றது. கடல்சாா் களத்தில் திறமைகளை வளா்த்துக் கொள்வதைத் தவிர, இப்பயிற்சியானது ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேம்படுத்தியது. பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த படையாகச் செயல்படும் என்பதை இந்தியா - ஆசியான் கடற்படைகளின் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.