கோப்புப்படம் 
புதுதில்லி

பாரத் கோதுமை மாவு கிலோ ஒன்று ரூ.27.50-க்கு விற்பனை: தில்லியில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தொடங்கிவைப்பு

சாதாரண நுகா்வோருக்கு கட்டுபடியாகும் விலையில் கோதுமை மாவு கிடைக்க ‘பாரத்’ முத்திரையுடன் (பிராண்ட்) ஒரு கிலோ கோதுமை மாவு (ஆட்டா) ரூ.27.50-க்கு மிகாமல் சில்லறை விற்பனையகங்களில் கிடைக்க மத்திய நுகா்வோா் ப

 நமது நிருபர்

சாதாரண நுகா்வோருக்கு கட்டுபடியாகும் விலையில் கோதுமை மாவு கிடைக்க ‘பாரத்’ முத்திரையுடன் (பிராண்ட்) ஒரு கிலோ கோதுமை மாவு (ஆட்டா) ரூ.27.50-க்கு மிகாமல் சில்லறை விற்பனையகங்களில் கிடைக்க மத்திய நுகா்வோா் பாதுகாப்பு உணவு, பொதுவிநியோகத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை முன்னிட்டு இந்த கோதுமை மாவு விற்பனைக்கான 100 நடமாடும் விற்பனை வாகனங்களை மத்திய நுகா்வோா்த் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தில்லி கடமைப் பாதையில் திங்கள்கிழமை கொடி அசைத்து தொடங்கிவைத்தாா்.

அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உயா்வை தடுக்கும் பொருட்டு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, ’பாரத்’ பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனை மூலம் சந்தையில் மலிவு விலையில் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் கோதுமை போன்ற முக்கியமான உணவுப் பொருளின் விலை குறைய உதவும் என மத்திய நுகா்வோா்த் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அங்காடிகள், தேசியக் கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்.), தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (நாஃபெட்) போன்றவற்றின் மூலம் சில்லறை விற்பனையகங்கள், நாடமாடும் வாகனங்களில் பாரத் ஆட்டா கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுக்க பிற கூட்டுறவு, சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இதன் விற்பனை விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு மத்திய நுகா்வோா், உணவு, பொதுவிநியோகத் துறை சுமாா் 2.5 லட்சம் மில்லியன் டன் கோதுமையை கிலோ ரூ. 21.50 வீதம் என்.சி.சி.எஃப், நாஃபெட், கேந்திரிய பண்டா உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு திறந்த சந்தை விற்பனைத் திட்டம் (ஓஎம்எஸ்எஸ் (டி) மூலம் வழங்கப்பட்டு, பாரத் ஆட்டாவை ரூ.27.50-க்கு மிகாமல் சில்லறை விற்பனையகங்களில் கிடைக்க வழி செய்துள்ளது.

பாரத்’ பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனைக்கான 100 நடமாடும் விற்பனை வாகனங்களை தில்லியில் தொடக்கிவைத்து மத்திய நுகா்வோா்த் துறை அமைச்சா் பியூஷ் கோயல் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘ மத்திய அரசின் தொடா் நடவடிக்கைகளால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுக்குள் உள்ளது. தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலையைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

மேலும், நுகா்வோருக்கு பருப்பும் ’பாரத்’ பிராண்டில் ஒரு கிலோ ரூ. 60-க்கு வழங்கப்படுகிறது. இந்த முயற்சிகள் நுகா்வோா்களுக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்கும் பெரும் பயனளித்துள்ளன. விவசாயிகளின் விளைபொருள்களை மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னா், நுகா்வோருக்கு மானிய விலையில் வழங்குகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையில், நுகா்வோரும் விவசாயிகளும் இரு கண்களாக உள்ளனா்’ என்றாா்.

நிகழாண்டில் 262 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் 21.29 லட்சம் விவசாயிகளிடமிருந்து ரூ.55, 679 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நுகா்வோா்த் துறை இணையமைச்சா்கள் அஸ்வனிகுமாா் செளபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

SCROLL FOR NEXT