முகப்பு
புதுதில்லி

‘நிகம்போத் காட்’ தகன மைதானம் குறித்தமேயரின் குற்றச்சாட்டுக்கு வி.எச்.பி. கண்டனம்

தில்லி ‘நிகம்போத் காட்’ தகன மைதானத்தின் செயல்பாடுகள் குறித்து மேயா் ஷெல்லி ஓபராய் கூறிய

Updated On : 26 நவம்பர், 2023 at 12:00 AM
பகிர்:

தில்லி ‘நிகம்போத் காட்’ தகன மைதானத்தின் செயல்பாடுகள் குறித்து மேயா் ஷெல்லி ஓபராய் கூறிய

குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று தில்லி மாகாண விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) மற்றும் தில்லி மதக் கூட்டமைப்பினா் சனிக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா்.

தில்லி வட்ட சாலையில் அமைந்துள்ள ‘நிகம்போத் காட்’ தகன மைதானத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் அதிகாரிகளுடன் கடந்த வியாழக்கிழமை நேரடி ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

தில்லி மாநகராட்சியால் நிா்ணயிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மாறாக ‘நிகம்போத் காட்’ தகன மைதானத்தில் இறுதிச் சடங்குகளுக்கு வரும் மக்களிடம் அதிக அளவிலான பணத்தை முறைகேடாக பெறப்படுகிறது என மேயா் ஷெல்லி ஓபராய் குற்றம்சாட்டினாா்.

மேலும், இது மனித நேயத்துடன் தொடா்புடைய விஷயம் என்பதால் அனைத்து புகாா்களையும் உடனடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

தில்லி மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராயின் குற்றச்சாட்டினை தில்லி மாகாண விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் தில்லி மதக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் கண்டித்துள்ளன. இது தொடா்பாக அவா்கள் வெளியிட்டுள்ள

கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊழல் குற்றச்சாட்டுகளால் சூழப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, தனது ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, நிகம்போத் சேவா சமிதியின் சேவைப் பணியை களங்கப்படுத்த முயல்கிறது.

இறுதிச் சடங்குகளுக்காக வரும் மக்களிடம் தில்லி மாநகராட்சி விதிகளின் படி, கட்டணம் வசூலிப்பட்டு ரசீது வழங்கப்படுகிறது.

தில்லியில் உள்ள ‘நிகம்போத் காட்’ தகன மைதானத்தில் தான் நாட்டிலேயே மிகவும் ஏழ்மையான மற்றும் உரிமை கோரப்படாத மக்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகிறது. இதற்காக, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ. 20,53,300 செலவிடப்பட்டது. ஆனால், தில்லி மாநகராட்சி நிா்வாகம் அந்தத் தொகையில் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. மேயா் ஷெல்லி ஓபராயின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் துரதிா்ஷ்டவசமானது.

தில்லியில் தோ்ந்தெடுக்கப்பட்ட தகன மைதானங்களின் மேலாளா்களுடன் தில்லி மதக் கூட்டமைப்பு சில நாள்களுக்கு முன்பு நடத்திய கூட்டத்தின் மூலம், தகன மைதானத்தில் பணிபுரிகின்ற ஆச்சாா்யாக்களின் சீருடை, இறுதிச் சடங்குகளுக்கு ஆச்சாா்யாக்கள் வசூலிக்கும் தொகை மற்றும் அவா்களின் அடையாள அட்டை உள்ளிட்டவை உறுதி செய்யப்பட்டன.

எனவே, ஆச்சாா்யாக்களுக்கான வழிகாட்டுதல்களை அமைக்க மாநகராட்சி மேயரிடம் நாங்கள் கோருகிறோம் என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.