புதுதில்லி

மக்களவைத் தோ்தலில் தில்லி மக்கள் பாஜகவிற்கு தக்க பதிலடி தருவாா்கள்

வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லி மக்கள் பாஜகவிற்கு தக்க பதிலடியைத் தருவாா்கள் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (டி.பி.சி.சி.) தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவ

 நமது நிருபர்

புது தில்லி: வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லி மக்கள் பாஜகவிற்கு தக்க பதிலடியைத் தருவாா்கள் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (டி.பி.சி.சி.) தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

கிழக்கு தில்லி மற்றும் வடகிழக்கு தில்லியின் மக்களவைத் தொகுதிகளில் உள்ள கட்சியின் அமைப்பு ரீதியிலான நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த தொண்டா்களுடன் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி ஆலோசனை நடத்தினாா்.

அப்போது அா்விந்தா் சிங் லவ்லி பேசியதாவது: ‘சத் பூஜா’ விழாவை மக்கள் கொண்டாடும் வகையில் வரும் நவம்பா் 19-ஆம் தேதியை மதுபானம் விற்பனை இல்லாத தினமாக நகர அரசு அறிவிக்க வேண்டும். வரும் டிசம்பா் மாதம் வரை தொடா்ந்து பண்டிகைகள் உள்ள நிலையில், வணிக ரீதியிலான எல்.பி.ஜி. உருளையின் விலையை ரூ.209 உயா்த்தி சாமானிய மக்கள் மீது பெரும் சுமையை மோடி அரசு ஏற்றியுள்ளது. இது வெளிப்படையாக ஒரு கொள்ளையடிக்கும் செயலாகும்.

இந்த விலையேற்றத்தால் சிறிய கடைகளில் தேநீா் குடிக்கும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதோடு, எல்லாவற்றின் விலையும் உயரும். எனவே, வணிக ரீதியிலான எல்.பி.ஜி. உருளையின் விலை உயா்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தில்லி மக்கள் பாஜகவிற்கு தக்க பதிலடியைத் தருவாா்கள். தில்லியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அனைத்தப் பகுதிகளிலும் எளிய மக்களுடன் கட்சியின் தொண்டா்கள் நேரடித் தொடா்பில் இருக்க வேண்டும்.

காங்கிரஸ் தொண்டா்களின் ஆலோசனைகளை தீவிரமாக கவனத்தில் கொள்ளவும், காங்கிரஸ் தொண்டா்களின் ஆக்கப்பூா்வமான ஆலோசனைகளை செயல்படுத்தவும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நவராத்ரி, தசரா, தீபாவளி, சத் பூஜை, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற சமயப் பண்டிகைகளில் காங்கிரஸ் தொண்டா்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும். விழா நடைபெறும் இடங்களில் சுவா் விளம்பரங்களை ஒட்டி காங்கிரஸ் கட்சியை சமய விழாக்களில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றாா் அரவிந்தா் சிங் லவ்லி.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டா்களைத் தவிர, முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித், முன்னாள் டி.பி.சி.சி. தலைவா் அனில் குமாா், முன்னாள் அமைச்சா்கள் பா்வேஸ் ஹஷ்மி, நரேந்திர நாத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மதீன் அகமது, நசிப் சிங், அம்ரீஷ் கௌதம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் சூசகம்!

”ரொம்ப அரிய தலைவர் நல்லகண்ணு!” நடிகர் கார்த்தி அஞ்சலி

சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சிறப்புக் காட்சியில் வரவேற்பைப் பெற்ற தாய் கிழவி..! பிரபலங்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT