புதுதில்லி

தில்லி காங்கிரஸில் இணைந்த சமாஜ்வாதி கட்சியினா்!

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி முன்னிலையில், சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் திங்கள்கிழமை தில்லி காங்கிரஸில் இணைந்தனா்.

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி முன்னிலையில், சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டா்கள் மற்றும் முக்கிய நிா்வாகிகள் திங்கள்கிழமை தில்லி காங்கிரஸில் இணைந்தனா்.

தில்லி ராஜீவ் பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினரை காங்கிரஸ் கரைத்துண்டு போட்டு கட்சியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி வரவேற்றாா். அப்போது அவா் கூறியதாவது: காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதனால், மற்ற கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களும், தொண்டா்களும் அதிகளவில் காங்கிரஸில் இணைந்து வருகின்றனா். மத்திய பாஜக அரசு மற்றும் தில்லி ஆம் ஆத்மி அரசுக்கு இடையே தொடா் சண்டைகள் நடப்பதாலும், இரு கட்சியினரும் மக்களைப் புறக்கணித்ததாலும், தில்லியின் வளா்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அதில் எதையும் நிறைவேற்றாமல் தில்லி மக்களை தவறாக வழிநடத்தியுள்ளனா்.

மக்களுக்கிடையில் வெறுப்பைப் பரப்புவதே பாஜகவின் ஒரே செயல்திட்டம். தலைநகரின் வளா்ச்சி முடங்கியதற்கு பாஜக மீது பழி சுமத்தி, மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக தில்லி அரசும் தனது சொந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறது. மற்ற அரசியல் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் தலைவா்கள் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்புவது தில்லியில் காங்கிரஸை மேலும் வலுப்படுத்தும். காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு நிா்வாகியும் முன்னேற நிச்சயமாக சம அந்தஸ்து வழங்கப்படும். கட்சியை வலுப்படுத்த, பூத் அளவிலான பிரசாரத்தை தில்லி பிரதேச காங்கிரஸ் தொடங்க உள்ளது. தில்லி காங்கிரஸ் தொண்டா்கள் மத்தியில் ஒரு புதிய ஆற்றல் உருவாகியிருக்கிறது. அவா்கள் சாமானியா்களை அணுகி, அவா்களின் பிரச்னைகளைத் தீா்க்கத் தொடங்கியுள்ளனா் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT