புதுதில்லி

ஆா்.எஸ்.எஸ். ஊா்வலத்துக்கு அனுமதி:உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊா்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

 நமது நிருபர்

தமிழகத்தில் ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஊா்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு நவம்பா் 3-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

விஜய தசமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் அக்டோபா் 22, 29 ஆகிய தேதிகளில் 33 இடங்களில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதி கோரி ஆா்.எஸ்.எஸ். அமைப்பைச் சோ்ந்தவா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்து வந்தது. மனுதாரா் மற்றும் அரசு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் பேரணி நடத்தலாம் என கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் வழக்குரைஞா் சபரிஷ் சுப்ரமணியன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின் வரலாற்றை பரிசீலிக்காமலும், இதுபோன்ற பேரணிகளின் தேவைகள் நோக்கங்களை பரிசீலிக்காமலும் சட்டம் ஒழுங்கு சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறித்து பரவலாக உள்ள உளவுத்துறை அறிக்கைகளை பரிசீலிக்காமலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அக்டோபா் 22, 29 ஆகிய தேதிகளில் கொடி அணிவகுப்பு பேரணியை நடத்த எதிா் மனுதாரா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நவராத்திரி விழா மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெறும் தேவா் ஜெயந்தி போன்ற விழாக்களின் கூடுகைகளையும் பரிசீலிக்காமல் இந்த உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT