புதுதில்லி

தில்லியில் அக்டோபரில் மழை பற்றாக்குறைக்கு காற்றின் தரம் மிக மோசமாக இருந்ததே காரணம்

2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழாண்டில் அக்டோபரில் தில்லியின் காற்றின் தரம் மிக மோசமாக இருந்ததாகவும், இதுதான் மழைப் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

 நமது நிருபர்

2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழாண்டில் அக்டோபரில் தில்லியின் காற்றின் தரம் மிக மோசமாக இருந்ததாகவும், இதுதான் மழைப் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த அக்டோபரில் காற்றின் தரக் குறியீடு 210 புள்ளிகளாகவும், 2021 அக்டோபரில் 173 பதிவாகியிருந்தது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, தலைநகரில் அக்டோபரில் சராசரியாக காற்றின் தரக் குறியீடு 210 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதேபோன்று மழையும் குறைவாகப் பதிவாகியுள்ளது. அதாவது, நிகழாண்டு அக்டோபரில் ஒரே ஒரு மழை நாள் (5.4 மி.மீ. மழை) பதிவாகி இருந்தது. அதேவேளையில், கடந்த ஆண்டு அக்டோபரில் 6 மழை நாள்களும் (129 மி.மீ.), 2021 அக்டோபரில் ஏழு மழை நாள்களும் (123 மி.மீ.) பதிவாகி இருந்தது.

காற்றின் தர மேலாண்மைக்கான மைய ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவிக்கையில், 2023 அக்டோபரில் சராசரி காற்றின் வேகம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. அந்த மாதத்தில் மழை முற்றிலும் இல்லாத நிலை காணப்பட்டது. தரவுகளின்படி, தலைநகா் ‘நல்ல’ காற்றின் தரத்துடன் ஒரு நாள் கூட பதிவு செய்யவில்லை. அதேசமயம் 2022- இல் இரண்டு நாள்களும், 2021 இல் ஒரு நாளும் பதிவாகி இருந்தன. எனினும், நிகழாண்டு ஜனவரி 1 முதல் அக்டோபா் 31 வரை தில்லி காற்றின் தரக் குறியீடு 172 புள்ளிகளாகப் பதிவு செய்திருந்தது. இது ஆறு ஆண்டுகளில் இதே காலப் பகுதியில் இரண்டாவது சிறந்த நிலையாகும் என அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2020-ஆம் ஆண்டில் மட்டுமே இந்த காலகட்டத்தில் தில்லி நகரம் சிறந்த காற்றின் தரத்தைப் பதிவு செய்தது. 2022, 2021, 2019 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில், இந்தக் காலகட்டத்தில் சராசரி காற்றின் தரக் குறியீடு 179 முதல் 201 புள்ளிகள வரை இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பூஜ்ஜியத்திற்கும் 50-க்கும் இடைப்பட்ட காற்றின் தரக் குறியீடு ’நல்லது’, 51 மற்றும் 100 வரையிலும் ‘திருப்திகரமானது’, 101 மற்றும் 200 இடைப்பட்ட தரம் ‘மிதமானது’, 201 மற்றும் 300 ஆகியவற்றுக்கு இடையில் இருந்தால் ’மோசம்’ பிரிவாகும். 301 மற்றும் 400-க்கு இடைப்பட்ட அளவில் காற்றின் தரம் இருந்தால் ‘மிக மோசமானது’ ஆகும். மேலும், காற்றின் தரம் 401 மற்றும் 500 -க்கு இடைப்பட்டதாக இருந்தால் ‘கடுமையானது’ எனக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொபெட்டிலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியா்கள் இருவா் கைது

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது! - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

”அவர் உருவாக்கிய யாரும் வீண்போகவில்லை!” நல்லகண்ணு குறித்து முத்தரசன்!

மகாராஷ்டிரத்தில் 2025-ல் மட்டும் 41 புலிகள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT