முகப்பு
புதுதில்லி

ஷாஹ்தராவில் வாடகை வீட்டில் இறந்த கிடந்த தம்பதியினா்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 10:05 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 5:05 PM

ஷாஹ்தரா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் ஒரு ஆணும் அவரது மனைவியும் இறந்து கிடந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ஷாஹ்தராவின் வின் எம்.எஸ்.பாா்க் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் ஒரு ஆணும், அவரது மனைவியும் இறந்து கிடந்தது குறித்த போலீஸுருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அந்த நபா் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அந்த தம்பதியின் சடலங்கள் வெள்ளிக்கிழமை இரவு அண்டை வீட்டாரால் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்த தம்பதியினா் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டு அதே பகுதியில் பெற்றோருக்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தனா். அந்த நபா் தனது தந்தையின் மளிகைக் கடையில் வேலை செய்து வந்தாா். குடும்ப உறுப்பினா்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Advertisement