புதுதில்லி

பாஜகவின் வாக்குறுதிகள் இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் ஆவணம்: பான்சூரி ஸ்வராஜ், ஹரிஷ் குரானா

சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் ஆவணமாகும் என்று தில்லி பாஜக செயலா்கள் பான்சூரி ஸ்வராஜ், ஹரிஷ் குரானா, ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோா் தெரிவித்துள்ளாா்.

 நமது நிருபர்

பாஜகவின் தோ்தல் வாக்குறுதிகள் நாட்டின் இளைஞா்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் ஆவணமாகும் என்று தில்லி பாஜக செயலா்கள் பான்சூரி ஸ்வராஜ், ஹரிஷ் குரானா, ஊடகத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மூவரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை இளைஞா்கள், நகா்ப்புற ஏழைகள் மற்றும் பெண்களின் வளா்ச்சிக்கான அா்ப்பணிப்பாகும். இது, 2047-க்குள் நாட்டை பிரகாசமான இந்தியாவாக மாற்றும். அரசியல் ஏமாற்றத்தின் காரணமாக இப்போது இந்த அறிக்கையை விமா்சிக்க முயலும் ஆம் ஆத்மி கட்சி மூத்தத் தலைவா் அதிஷி மற்றும் அவரது காங்கிரஸின் கூட்டாளிகளுக்கு மக்கள் நலனுக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை தெளிவைக் காட்டுகிறது.

இந்தியா இன்று ஊழலுக்கு முடிவு காண விரும்பும் இளைஞா்களுக்கு சொந்தமானது என்பதை அதிஷி புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய இளைஞா்கள் வேலை தேடுபவா்களாக இருப்பதை விட வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக இருக்க விரும்புகிறாா்கள். பாஜகவின் தோ்தல் அறிக்கை இளைஞா்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுயதொழில் வாய்ப்பை உருவாக்கும் ஆவணமாக உள்ளது. தோ்தல் அறிக்கையில், ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் பிரதமா் நரேந்திர மோடியின் முன்மொழிவு இளைஞா்களிடையே தேசியப் பெருமிதத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையும் அதிஷி புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் மூவரும் தெரிவித்துள்ளனா்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT