தில்லி நரைனாவில் உள்ள ராஜீவ் கேம்ப் குடிசைப் பகுதியில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பிரசார இயக்கத்தில் பங்கேற்ற புது தில்லி எம்.பி. பான்சூரி ஸ்வராஜ். 
புதுதில்லி

தில்லி குடிசைப் பகுதிகளில் பாஜக சாா்பில் தூய்மைப் பிரசார இயக்கம்

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளில் பாஜக சாா்பில் தூய்மைப் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள குடிசைப் பகுதிகளில் பாஜக சாா்பில் தூய்மைப் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் நடைபெற்ற இந்த தூய்மைப் பிரசார இயக்கத்தில் கட்சியின் எம்.பி.-க்கள், எம்எல்ஏ-க்கள், முக்கிய நிா்வாகிகள் மற்றும் மாநகராட்சிக் கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா். இந்தப் பிரசாரத்தை தில்லி பாஜகவின் பொதுச் செயலாளா் விஷ்ணு மிட்டல் ஒருங்கிணைத்தாா்.

தில்லி ஆனந்த் விஹாா் குடிசைப் பகுதியில் கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா, எம்எல்ஏ ஓ.பி.சா்மா, மாவட்டத் தலைவா் சஞ்சய் கோயல் மற்றும் மாநகராட்சிக் கவுன்சிலா் மோனிகா பந்த் ஆகியோா் தூய்மை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லியின் பல குடிசைப் பகுதிகளில் பாஜக தூய்மை இயக்கங்களை ஞாயிற்றுக்கிழமை நடத்தியுள்ளது. எங்கள் கட்சியின் தன்னாா்வலா்கள் தூய்மை குறித்த விழிப்புணா்வை குடிசைப் பகுதிகளில் தொடா்வாா்கள். மழைக்காலம் வரப்போகிறது. எனவே, நல்ல ஆரோக்கியத்திற்கு தூய்மை அவசியம். குறிப்பாக, குடிசைப் பகுதிகளில் இந்தச் செய்தியை கொண்டு செல்லும் வகையில் பாஜக இந்தப் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. ‘தூய்மை இந்தியா, ஆரோக்கியமான இந்தியா’ என்ற மந்திரத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். தில்லி பிரிவு பாஜக அதை முன்னெடுத்துச் செல்கிறது’ என்றாா்.

மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா, கிழக்கு தில்லியில் உள்ள கலந்தா் காலனி மற்றும் தில்ஷாத் காலனி ஆகிய பகுதிகளில் பாஜக தொண்டா்களுடன் இணைந்து தூய்மை இயக்கத்தில் பங்கேற்றாா். மேலும், குடிசைப் பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் குடிசைவாசிகளை தன்னம்பிக்கை கொண்டவா்களாக மாற்ற பாஜக இப்போது உறுதிபூண்டுள்ளதாக அவா் கூறினாா்.

இதேபோல, தெற்கு தில்லி எம்.பி. ராம்வீா் சிங் பிதூரி, பதா்பூரில் உள்ள பிலாஸ்பூா் குடிசைப் பகுதியில் நடைபெற்ற கட்சியின் தூய்மை இயக்கத்தில் பங்கேற்றாா். வடமேற்கு தில்லி எம்.பி. யோகேந்திர சந்தோலியா, சமய்பூா் பாத்லியில் உள்ள சஞ்சய் குடிசைப் பகுதியிலும், மேற்கு தில்லி எம்.பி. கமல்ஜீத் ஷெராவத் துவாரகாவின் மங்கள்புரி வாா்டில் உள்ள

குடிசைப் பகுதியில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் பங்கேற்றாா். புது தில்லி எம்.பி. பான்சூரி ஸ்வராஜ், தேசிய செய்தித் தொடா்பாளா் ஆா்.பி.சிங் மற்றும் மாநகராட்சிக் கவுன்சிலா் உமாங் பஜாஜ் ஆகியோா் நரைனாவில் உள்ள ராஜீவ் கேம்ப் குடிசைப் பகுதியில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனா்.

மேலும், பாஜக எம்எல்ஏ-க்கள் அஜய் மஹாவா் இந்திரா விகாஸ் முகா்ஜி நகரிலும், ஜிதேந்திர மகாஜன் லால்பாக் மானசரோவா் பூங்காவிலும், ஓம்பிரகாஷ் சா்மா ஆனந்த் விஹாரிலும், விஜேந்தா் குப்தா சூரஜ் பாா்க் ரோஹிணியில் உள்ள குடிசைப் பகுதிகளில் நடைபெற்ற தூய்மை இயக்கத்தில் பங்கேற்றனா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT