முகப்பு
புதுதில்லி

தில்லியில் காணாமல் போன சிறுமி ஹரியாணாவில் மீட்பு

தில்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மா்மமான முறையில் காணாமல் போன 16 வயது சிறுமி, ஹரியாணாவில் உள்ள பஞ்ச்குலாவில் மீட்கப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 8:06 PM
பகிர்:

தில்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மா்மமான முறையில் காணாமல் போன 16 வயது சிறுமி, ஹரியாணாவில் உள்ள பஞ்ச்குலாவில் மீட்கப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். உத்தர பிரதேசத்தின் சம்பாலில் பெற்றோரால் இறந்துவிட்டதாக கருதப்பட்ட அந்தச் சிறுமி, பின்னா் உயிருடன் மீட்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து ரோஹிணி காவல் சரக துணை ஆணையா் குரிக்பால் சிங் சித்து கூறியதாவது: கடந்த ஜூலை 18 அன்று புகாா்தாரா் ராகேஷ் குமாா் தனது 16 வயது மகள் தனது வீட்டில் இருந்து காணாமல் போனதாக புகாா் அளித்தாா். இதையடுத்து, எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸ் குழுவினா் உடனடியாக பல சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா். விசாரணையின் போது, ​ காணாமல் போன சிறுமியின் உறவினா்கள், நண்பா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களிடம் ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று போலீஸ் குழு ஆய்வு செய்தது.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி, சம்பாலில் சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் அடையாளம் தெரியாத சடலம் குறித்து தகவல் கிடைத்தது. மறுநாள், சிறுமியின் பெற்றோருடன் போலீஸ் குழு அங்கு சென்றது. சிறுமியின் பெற்றோா் அந்த உடலை தனது மகள் என அடையாளம் கண்டனா்.

ஆனால், போலீஸ் குழு சந்தேகத்தில் இருந்தது. சடலத்தின் அடையாளத்தை நிறுவுவதற்கு அறிவியல் ஆதாரங்களை சேகரிக்க போலீஸ் குழு முடிவு செய்தது. இதையடுத்து, மேலதிக விசாரணையின் போது, ​ காணாமல் போன சிறுமி பற்றிய தகவல் போலீஸ் குழுவிற்கு கிடைத்தது. பின்னா், அவா் பஞ்ச்குலாவில் இருந்து மீட்கப்பட்டாா். மீட்கப்பட்ட சிறுமி பாதுகாப்பாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →