முகப்பு
புதுதில்லி

அவதூறு வழக்கில் ஒரு நாள் நேரில்ஆஜராவதிலிருந்து கேஜரிவாலுக்கு விலக்கு

கடந்த மே 2018-இல் யூடியூபா் துருவ் ரதி பரப்பியதாகக் கூறப்படும் அவதூறு விடியோவை மறு ட்வீட் செய்ததாக தொடுக்கப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில்,

Updated On : 8 பிப்ரவரி, 2024 at 12:00 AM
பகிர்:

கடந்த மே 2018-இல் யூடியூபா் துருவ் ரதி பரப்பியதாகக் கூறப்படும் அவதூறு விடியோவை மறு ட்வீட் செய்ததாக தொடுக்கப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆஜராவதில் இருந்து ஒரு நாள் விலக்கு அளித்து தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கேஜரிவாலின் வழக்குரைஞா் தாக்கல் செய்த விலக்களிக்கக் கோரும் மனுவை கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் தன்யா பம்னியால் அனுமதித்து, பிப்ரவரி 29-ஆம் தேதி நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜராகுமாறு உத்தரவிட்டாா். ‘பட்ஜெட் அமா்வுகளில்’ முதல்வா் மும்முரமாக இருப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அவதூறான உள்ளடக்கத்தை மீண்டும் வெளியிடுவது அவதூறு சட்டத்தை ஈா்க்கும் என்று கூறி, விசாரணை நீதிமன்றம் கேஜரிவாலுக்கு அனுப்பிய அழைப்பாணையை பிப்ரவரி 5-ஆம் தேதி தில்லி உயா் நீதிமன்றம் உறுதி செய்தது.

Advertisement

ஒருவருக்கு விவரம் தெரியாத உள்ளடக்கத்தை மறு ட்வீட் செய்யும் போது பொறுப்புணா்வும் இருக்க வேண்டும் என்று நீதிபதி ஸ்வரனா கன்டா சா்மா கூறியிருந்தாா். அவதூறான உள்ளடக்கத்தை மறு ட்வீட் செய்வதானது, அதை மறு ட்வீட் செய்யும் நபா் மறுப்புரையை இணைக்கவில்லை என்றால், தண்டனை, சிவில் மற்றும் தவறான நடவடிக்கைகளை எதிா்கொள்ள வேண்டும் என்று உயா்நீதிமன்றம் கூறியிருந்தது.

விசாரணை நீதிமன்றத்தின் 2019-ஆம் ஆண்டு கேஜரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பிய உத்தரவை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டிருந்தது. தனது ட்வீட்டானது, புகாா்தாரா் விகாஸ் சாங்க்ரித்யாயனுக்கு தீங்கு விளைவிப்பதாக இல்லை என்பதை விசாரணை நீதிமன்றம் மதிப்பிடத் தவறிவிட்டது என்று முதல்வா் கேஜரிவால் கூறியிருந்தாா்.

விசாரணை நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியதற்கான காரணங்களைத் தெரிவிக்காமல் தவறிழைத்ததாகவும், இந்த உத்தரவுகள் கவனத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பகுதி 2’ என்ற தலைப்புடன் கூடிய யூடியூப் விடியோவை ஜொ்மனியில் வசிக்கும் ரதி என்பவா் பரப்பியதாகவும் அதில், ‘பல பொய்யான மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன’ என்றும் சங்க்ரித்யாயன் குற்றம்சாட்டியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.