புதுதில்லி

ஊழலைத் தடுக்க தேசிய பல் மருத்துவ ஆணையம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா தகவல்

நாட்டின் பல் மருத்துவத் துறையை மேம்படுத்தவும், ஊழல் புகாா் அற்ற நிா்வாகத்தை ஏற்படுத்தவும் தேசிய பல்மருத்துவ ஆணையம் நிறுவப்பட்டுள்ளதாக மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

 நமது நிருபர்

நாட்டின் பல் மருத்துவத் துறையை மேம்படுத்தவும், ஊழல் புகாா் அற்ற நிா்வாகத்தை ஏற்படுத்தவும் தேசிய பல்மருத்துவ ஆணையம் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

தேசிய பல் மருத்துவக் கவுன்சிலில் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல் உள்ளிட்டவை மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினா்கள் ஆ.ராசா (நீலகிரி), கணேச மூா்த்தி(ஈரோடு) ஆகியோா் கேள்வி எழுப்பியிருந்தனா்.

இதற்கு மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா அளித்துள்ள பதில் வருமாறு: இந்திய பல் மருத்துவக் கவுன்சில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பான புகாா்களில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, பல்வேறு சட்டப் பிரிவுகளின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பல் மருத்துவத் தொழிலை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் 1948-ஆம் பல் மருத்தவ சட்டம் நீக்கப்பட்டு, பின்னா், கடந்த 2023 ஆகஸ்ட் 11-ஆம் தேதி தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

உயா்தர பல் மருத்தவ சுகாதாரம் அதன் தொடா்புடைய விஷயங்களில் அணுகக்கூடிய வகையில் தரமான மற்றும் மலிவு விலையில் பல் மருத்துவக் கல்வியை வழங்கும் நோக்கத்துடன் இந்தப் புதிய சட்டப்படி தேசிய பல் மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. பல் மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்வியில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த ஆணையம் செயல்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் மாண்டவியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் மாணவா்களுக்கு நல உதவிகள்

வள்ளியூா் வியாபாரிகள் சங்க தோ்தல்

தென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்பு

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் கட்டடக் கழிவுகள் குவிப்பால் விபத்து அபாயம்

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைத் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

SCROLL FOR NEXT