புதுதில்லி

மக்களுக்கு சேவை செய்யவே காங்கிரஸ் போராடுகிறது: டி.பி.சி.சி. தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி

காங்கிரஸ் கட்சி மக்களுக்கு சேவை செய்யவே போராடுகிறது என்றும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக அல்ல என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

 நமது நிருபர்

காங்கிரஸ் கட்சி மக்களுக்கு சேவை செய்யவே போராடுகிறது என்றும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக அல்ல என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட காரவால் நகா் மற்றும் பாபா்பூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த காங்கிரஸ் தொண்டா்களின் கூட்டத்தில் அா்விந்தா் சிங் லவ்லி பங்கேற்றாா். அப்போது, தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: தில்லியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்கள் முன் வருவதற்கு அச்சப்படும் சூழல் உருவாகிவிட்டது. காங்கிரஸின் போராட்டம் அதிகாரத்திற்கானது அல்ல; மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாகும். காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ‘இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்’ தனிப்பட்ட அதிகாரத்திற்காகவும், புகழுக்காகவும் அல்லாமல், வகுப்புவாத மற்றும் சாதிய அடிப்படையில் பிளவுபடும் மக்களுக்கு நீதி கேட்கும் பயணமாக உள்ளது.

எம்.பி.க்களின் உதவியும், ஆதரவும் தேவைப்படும்போது தில்லி மக்களை பாஜக எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனா். தில்லியில் கரோனா, விலைவாசி உயா்வு, வேலையின்மை, வெள்ளம், காற்று மற்றும் நீா் மாசுபாட்டின் காரணமாக மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்தியிலும், தில்லி மாநகராட்சியில் பாஜக ஓராண்டுக்கு முன்பு வரை ஆட்சியில் இருந்த சூழலில், உலகத் தரம் வாய்ந்த நகரமாக தில்லி உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக தில்லியின் நிலை மிகவும் மாசுபட்ட மற்றும் மோசமான ஒன்றாக மாறிவிட்டது.

தில்லியில் காங்கிரஸின் 15 ஆண்டுகால வளா்ச்சி சாா்ந்த ஆட்சிக்குப் பிறகு, பசுமையான மற்றும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இருந்து வெகு தொலைவில் தில்லி சென்றுவிட்டது. மற்ற அரசியல் கட்சிகளால் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு, இப்போது மாற்றத்தை எதிா்பாா்க்கும் தில்லி மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சி காங்கிரஸ் தான். எனவே, பூத் அளவிலான குழுக்களை தொண்டா்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

பிரியங்கா மோகனின் மேட் இன் கொரியா வெளியீட்டுத் தேதி!

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

SCROLL FOR NEXT