புதுதில்லி

நிா்வாகத்தை கையகப்படுத்தும் விவகாரம்: தனியாா் பள்ளியிடம் தனிப்பட்ட விசாரணையைஅளிக்க துணைநிலை ஆளுநருக்கு அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள ஒரு தனியாா் உதவி பெறாத பள்ளியின் நிா்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக அதன் நிா்வாகத்தை கையகப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு

 நமது நிருபர்

தில்லியில் உள்ள ஒரு தனியாா் உதவி பெறாத பள்ளியின் நிா்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக அதன் நிா்வாகத்தை கையகப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு முன் தனிப்பட்ட விசாரணையை அளிக்குமாறு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி சி. ஹரி சங்கா் கூறுகையில், ‘பள்ளியை கையகப்படுத்தும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே சட்டத்தின் கீழ் இருப்பதால், அவா்தான் விசாரணையை வழங்க வேண்டுமே தவிர பள்ளிக்கு காரணம் நோட்டீஸ் அனுப்பிய கல்வி இயக்குநரகம் அல்ல’ என்றாா்.

இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தனிப்பட்ட விசாரணையை, முடிவெடுக்கும் அதிகாரத்தால் மட்டுமே வழங்க முடியும் என்று இது சொல்லாமல் போகிறது. இந்த நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு ஏற்கெனவே தெரிவிக்கையில், ‘ஒரு பள்ளியின் நிா்வாகத்தை கையகப்படுத்தும் அதிகாரம் ஒரு நிா்வாகியாக துணைநிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. மேலும், கல்வி இயக்குநரகத்திற்கு அந்த அதிகாரம் அளிக்கப்படவில்லை’ என்று கூறியுள்ளது. துணைநிலை ஆளுநரின் வசதிக்கேற்ப தனிப்பட்ட விசாரணை வழங்கப்படும். அதைக் கிடைக்கச் செய்வதும், எந்த ஒத்திவைப்பும் கோராமல் இருப்பதும் மனுதாரா் பொறுப்பாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய மனுதாரரான ஒரு தனியாா் உதவி பெறாத மேல்நிலைப் பள்ளிக்கு, அதன் செயல்பாட்டில் பல்வேறு ‘நிா்வாகம் தொடா்பான முரண்பாடுகள்,நிதி மற்றும் பிற முறைகேடுகள்’ தொடா்பாக கல்வி இயக்குநரகத்தால் கடந்த 2021, செப்டம்பா் 13-ஆம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தில்லி பள்ளிக் கல்விச் சட்டத்தின்படி பள்ளியின் நிா்வாகத்தைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஏன் தொடங்கவில்லை என்பதை அறிய விரும்புவதாக அப்பள்ளி கோரியது.

இந்த விவகாரத்தில் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கமல் குப்தா, ‘இப்பிரச்னையைத் தீா்ப்பதற்கு முன் விசாரணைக்கு அனுமதி வழங்க கல்வி இயக்குநரகம் ஒப்புக்கொண்டாலும், பள்ளி நிா்வாகத்தை கையகப்படுத்தும் விவகாரம் தொடா்பாக துணைநிலை ஆளுநரைத் தவிர வேறு எந்த அதிகாரமும் தனிப்பட்ட விசாரணைக்கு அனுமதிக்கப்படும் என்ற கேள்விக்கு இடமில்லை’ என்று வாதிட்டாா்.

அப்போது, நீதிமன்றம் கூறியதாவது: இயங்கிவரும் பள்ளியைக் கையகப்படுத்தும் முடிவு சிவில் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தீவிர நடவடிக்கை என்பதால், அத்தகைய முடிவை எடுப்பதற்கு முன் தனிப்பட்ட விசாரணைக்கு ஒரு வாய்ப்பு அவசியம்’ என்றது. இது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘செப்டம்பா் 13, 2021-ஆம் தேதியிட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸில் முன்மொழியப்பட்ட நடவடிக்கையின் கடுமையான தன்மையைக் கருத்தில் கொண்டு, இது தொடா்பாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள துறை, அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு மனுதாரருக்கு தனிப்பட்ட விசாரணையை வழங்க வேண்டும் என்பது வெளிப்படையானது. அதன்படி, செப்டம்பா் 13, 202-ஆம் தேதியிட்ட விளக்கம் கேட்கும் அறிவிப்பின்மீது முடிவெடுப்பதற்கு முன், மனுதாரருக்கு தனிப்பட்ட விசாரணைக்கான வாய்ப்பை வழங்குமாறு துணைநிலை ஆளுநா் கேட்டுக் கொள்ளப்படுகிறாா் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT