முகப்பு
புதுதில்லி

பைக் மீது வாகனம் மோதல்: இருவா் சாவு; இருவா் காயம்

தென்மேற்கு தில்லியில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு போ் வந்த மோட்டாா் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 24 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

தென்மேற்கு தில்லியில் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு போ் வந்த மோட்டாா் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மேலும், இருவா் படுகாயமடைந்தனா். இந்த வழக்கில் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் தீரஜ் தல்வாா் என அடையாளம் காணப்பட்டு, விதிமீறல் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 22 அன்று, தேசிய நெடுஞ்சாலை 8-இல் தூண் எண் 163 அருகே நடந்த விபத்து குறித்து போலீஸாருக்கு பிசிஆா்அழைப்பு வந்தது. மோட்டாா் சைக்கிளில் வந்த நான்கு போ் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்ததாக அழைப்பாளா் எங்களிடம் கூறினாா்.

இதைத் தொடா்ந்து தில்லி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தைச் சோ்ந்த ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். அங்கு சாலையில் ரத்தம் இருப்பதைக் கண்டனா். காயமடைந்தவா்கள் ஏற்கெனவே ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் காய சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதில் நஸ்ரீன் (35) மற்றும் அவரது மகன் அசீம் (13) ஆகியோா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. நஸ்ரீனின் கணவா் மெகபூப் (37) மற்றும் மகள் ஆயிஷா (6) ஆகியோா் சிகிச்சையில் உள்ளனா். போலீஸாா் எப்ஐஆா் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

சுமாா் 10 கிலோமீட்டா் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. வாகனத்தை அடையாளம் கண்டு அதன் உரிமையாளரை விசாரித்தோம். வாகனத்தின் உரிமையாளா் தனது கணவா் தீரஜ் தல்வாா் காரை வெளியே எடுத்துச் சென்ாக போலீஸாரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, தீரஜ் தல்வாா் பின்னா் கைது செய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →