முதல்வர் அதிஷி PTI
புதுதில்லி

வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை! தில்லி முதல்வர்

தில்லி காற்றுமாசு குறித்து முதல்வர் அதிஷி பேட்டி..

DIN

வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக தில்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லி நகரில் திங்கள்கிழமை காலை 8 மணியளவில், காற்றின் தரக் குறியீடு 484 புள்ளியாக பதிவாகியுள்ளதால், மிக கடுமை பிரிவாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

கிரேப்-4 அமல்

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் மிக கடுமையான பிரிவுக்கு சென்றதால், மாசு அளவைக் கட்டுப்படுத்த தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் என்று சொல்லப்படும் கிரேப்-4 கட்டுப்பாடுகள் இன்று அமல்படுத்தப்பட்டுள்ளது.

நச்சுப்புகை மூட்டத்தால் மக்கள் வீட்டைவிட்டு வெளிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் வாகனங்களை தடை, மாநிலங்களுக்கிடையே இயக்கப்படும் சிஎன்ஜி பேருந்துகள், சில வகை கட்டுமான நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், அரசு அலுவலக நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தில்லி - தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) இன்றியமையாத கட்டுமானம் மற்றும் இடிப்பு, கல் நொறுக்கும் இயந்திரங்களை மூடுவது மற்றும் சுரங்க நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அவசர நிலை

தில்லி காற்றுமாசு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் அதிஷி பேசியதாவது:

"அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறது.

இன்று, ஒட்டுமொத்த வட இந்தியாவும் மருத்துவ அவசர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தில்லி, சண்டீகர், ஜெய்ப்பூர், போபால், பாட்னா, லக்னெள உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம், மோசம், கடுமை, மிகக் கடுமை பிரிவில் உள்ளன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டுக் கொண்டுள்ளது. இன்று, நாட்டு மக்களால் மூச்சுகூட விட முடியவில்லை.

ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் அல்லது மத்திய பிரதேச மாநிலங்களின் எல்லா இடங்களிலும் விவசாயக் கழிகள் எரிப்பதைக் காணலாம். மத்திய அரசு என்னதான் செய்து கொண்டுள்ளது.

நாட்டில், விவசாயக் கழிவுகள் எரிப்பதைக் குறைத்துள்ள ஒரே மாநிலம் பஞ்சாப். தரவுகளின்படி, 2021ஆம் ஆண்டு மொத்தமாக 71,300 இடங்களில் எரிக்கப்பட்டன, ஆனால், கடந்தாண்டு 36,650-ஆக குறைக்கப்பட்டது. இந்தாண்டு பஞ்சாபில் 8,404 மட்டுமே பதிவாகியுள்ளது.

ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டை காட்டிலும், விவசாயக் கழிவுகள் எரிப்பு 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்திலும் அதிகரித்துள்ளது.

விவசாயக் கழிவுகள் எரிப்பதை பஞ்சாப் அரசு 80 சதவிகிதம் வரை குறைத்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் மட்டும் அதிகரிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT