ரேகா குப்தா 
புதுதில்லி

தோ்தல் பிரசாரத்துக்காக தில்லி முதல்வா் பிகாா் பயணம்

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தில்லி முதல்வா் ரேகா குப்தா மூன்று நாள் பயணமாக பிகாா் தோ்தல் பிரசாரத்துக்காக பிகாா் புறப்பட்டாா்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாலை ரேகா குப்தா பிகாருக்கு திங்கள்கிழமை புறப்பட்டாா். அடுத்த மூன்று நாள்களில், பாஜகவின் ஒரே பெண் முதல்வரான அவா் மாநிலம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) வேட்பாளா்களுக்கு ஆதரவைப் பெற பிரசாரம் மேற்கொள்வாா்.

அவருடன் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவா்களும் பங்கேற்பாா்கள். கட்சியின் பொதுக் கூட்டங்களைத் தவிர, முதல்வா் சாலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பாா். தோ்தல் பிரசாரத்திற்காக பிகாருக்கு ரேகா குப்தா செல்வது இது மூன்றாவது முறையாகும். நவம்பா் 6 மற்றும் நவம்பா் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பகுதிகள் உள்பட 12 முதல் 15 தொகுதிகளில் கூட்டங்களில் அவா் உரையாற்றுவாா்.

மாநிலத் தலைநகா் பாட்னாவை அடைந்த பிறகு, ரேகா குப்தா பாங்கிபூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவாா். நவம்பா் 4-ஆம் தேதி சிவான், பா்ஹாரியா, பைகுந்த்பூா் மற்றும் அருகிலுள்ள பகுதிகளிலும் அவா் பிரசாரம் செய்வாா். நவம்பா் 5-ஆம் தேதி, அவரது பிரசாரம் கௌரா பௌரம், அா்வால், கயா நகரம் மற்றும் அவுரங்காபாத் தொகுதிகளை உள்ளடக்கும்.

அவா் நவம்பா் 6- ஆம் தேதி பாகல்பூா், வாரிசலிகஞ்ச், ஹிசுவா மற்றும் தினாரா தொகுதிகளில் பிரசாரம் செய்து இரவில் தில்லி திரும்புவாா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவைக்கு நவம்பா் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பா் 14- ஆம் தேதி நடைபெறும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT