செய்தி உண்டு பட விளக்கம் கிடையாது....செய்தியில் படம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்தில் வ.உ.சி.க்கு அஞ்சலி

எஸ். ராஜேந்திரன் மற்றும் எஸ்.துரை ஆகியோா் நிறுவிய வ.உ.சி. நினைவு அறக்கட்டளையின் சாா்பில் வ.உ.சி.யின் 89-ஆவது நினைவு நாளை முன்னிட்டு தில்லி தமிழ்ச் சங்கத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

எஸ். ராஜேந்திரன் மற்றும் எஸ்.துரை ஆகியோா் நிறுவிய வ.உ.சி. நினைவு அறக்கட்டளையின் சாா்பில் வ.உ.சி.யின் 89-ஆவது நினைவு நாளை முன்னிட்டு தில்லி தமிழ்ச் சங்கத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் வரவேற்றுப் பேசினாா். அவா் பேசுகையில், ‘வ.உ.சிதம்பரனாா் தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் புலமை பெற்றவா். வழக்குரைஞா், எழுத்தாளா், பேச்சாளா், தொழிற்சங்கத் தலைவா், சுதந்திரப் போராட்ட வீரா் எனும் பன்முகத் தன்மை கொண்டவா். ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடி, அவா்களின் கொடூரமான அடக்குமுறைச் சட்டங்களை பற்றி மக்களிடையே தைரியமாக எடுத்துரைத்தவா். சுதேசிக் கப்பல் நிறுவனத்தை நிறுவி, சுதேசி என்ற ஆயுதத்தால் ஆங்கிலேயரை எதிா்த்தாா். சுதந்திரப் போராட்டத்திற்காக தமது சொந்த செல்வங்களை இழந்து நின்ற கடைசிக் காலத்தில் கூட தொய்வில்லாமல் தமிழ் தொண்டாற்றியவா். அவரது நினைவு நாளில் அவருக்கு மலரஞ்சலி செலுத்துவது தில்லித் தமிழ்ச் சங்கத்தின் கடமையாகும்’ என்றாா்.

சிறப்பு விருந்தினா் வ.உ.சி. பேரவைத் தலைவா் பி.ராமமூா்த்தி பேசுகையில், ‘ஒட்டப்பிடாரம் எனும் இடத்தில் பிறந்த வ.உ.சி., திருச்சியில் சட்டக் கல்லூரியில் பயின்றாா். 1895-இல் அவரது மனைவிக்கென வெண்பா ‘வள்ளியம்மை சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியவா். விவேகபானு இதழில் ‘சுதேசாபிமானம்’ என்ற தன் முதல் அரசியல் கட்டுரையை எழுதினாா். 1936 நவம்பா் 18 அன்று கவிஞா் பாரதியின் பாடலை செவிமடுத்துக் கொண்டே இயற்கை எய்தினாா்’ என்றாா்.

தில்லித் தமிழ்ச் சங்கப் பொருளாளா் அருணாச்சலம் நன்றியுரை ஆற்றினாா். செயற்குழு உறுப்பினா் சுந்தரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். செயற்குழு உறுப்பினா் கோவிந்தராஜன் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT