தில்லியில் நவ.30-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநகராட்சி இடைத்தோ்தலை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருவதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: மாநகராட்சி இடைத்தோ்தலை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனா்.
உயா் பாதுகாப்பு தயாா்நிலையை மதிப்பிடுவதற்கும், வரிசைப்படுத்தல் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் காவல் துறை ஆணையா், துணை ஆணையா் மற்றும் காவல் நிலைய பொறுப்பாளா்கள் மறுஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனா்.
முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துதல், ரோந்துப் பணியை அதிகரித்தல் மற்றும் இடையூறு ஏற்படுத்துபவா்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை குறித்து இந்த கூட்டங்களில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அறியப்பட்ட குற்றவாளிகள் மீது கண்காணிப்பை வைத்திருக்கவும், பாதுகாப்பு இடைவெளிகளை நிரப்ப வழக்கமான ரோந்து பணிகளை உறுதி செய்யவும் காவல் நிலைய பொறுப்பாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்ட மேலாண்மை மற்றும் விரைவான பதிலளிப்பு நெறிமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
உள்ளூா் மதிப்பீடுகளின் அடிப்படையில் சிறப்பு மறியல் தடுப்பு குழு மற்றும் மாவட்ட காவலா்களின் இருப்புக்களில் இருந்து கூடுதல் காவலா் Śழுக்கள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.