புது தில்லி: தில்லியில் செயற்கை மழை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியில் 53 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக செயற்கை மழை சோதனை செவ்வாய்க்கிழமை(அக். 28) நடத்தப்பட்டது.
ஐஐடி கான்பூர் இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. விமானத்திலிருந்து வான் வழியாக நிலப்பரப்பை நோக்கி செயற்கை ரசாயனங்கள் தூவி அதன்மூலம் சுமார் 90 நிமிஷங்கள் வரை செயற்கை மழைப்பொழிவை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக கான்பூரிலிருந்து வரவழைக்கப்பட்ட விமானத்திலிருந்து மேக விதைப்பு(க்ளவுட் சீடிங்) முறையில் செயற்கை மழைப் பொழிவு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தில்லியின் புராரி மற்றும் கரோல் பாக் பகுதிகளில் இந்த சோதனை முயற்சி இன்று நடத்தப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவே செயற்கை மழை சோதனை தில்லியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.