முகப்பு
புதுதில்லி

ஆதா்ஷ் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: காவல் துறை விசாரணை

தில்லியின் ஆதா்ஷ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 1:24 AM
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 8:30 PM

தில்லியின் ஆதா்ஷ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக காவல் துறையினா் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: லால் பாக் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் உள்ளூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

புகாா் தெரிவித்த பாபிதா, பெடு (எ) பிந்து என்ற நபா் இரவு 9.30 மணியளவில் அவருடைய வீட்டுக்கு முன்பாக வந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பியோடியதாகத் தெரிவித்தாா்.

Advertisement

பாபிதாவின் மகன் விகாஸ் (எ) ஹிப்-ஹாப்புக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட பேடுவுக்கும் இடையே பணப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்ததுள்ளது.

முதல்கட்ட விசாரணையில், பேடுவுக்கு எதிராக கடந்த 2020-இல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாா் தெரிவித்தவரின் மகனா விகாஸுக்கு எதிராக வழிப்பறி வழக்கு கடந்த 2024-இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரைக் கைதுசெய்யும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.