கோப்புப் படம் 
புதுதில்லி

கிழக்கு தில்லியில் நெரிசலைக் குறைக்க சாத்தியக்கூறு ஆய்வு: பொதுப்பணித் துறை திட்டம்

கிழக்கு தில்லியின் முக்கியப் பகுதிகளான கீதா காலனி சாலை, பட்பா்கஞ்ச் சாலை மற்றும் மதா் டெய்ரி சாலை ஆகியவற்றில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, பொதுப்பணித்துறை ஒரு சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Syndication

புது டெல்லி: கிழக்கு தில்லியின் முக்கியப் பகுதிகளான கீதா காலனி சாலை, பட்பா்கஞ்ச் சாலை மற்றும் மதா் டெய்ரி சாலை ஆகியவற்றில் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, பொதுப்பணித்துறை ஒரு சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

மேலும், தில்லியின் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றான லட்சுமி நகா் சந்திப்பில் ஒரு ஸ்கைவாக் அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

‘கீதா காலனி சாலையில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், நெரிசல் இல்லாத போக்குவரத்து இயக்கத்தை ஏற்படுத்தவும், மதா் டெய்ரி மற்றும் காஷ்யப் மொஹல்லா இடையே ஒரு சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும்’ என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சமீபத்தில், விகாஸ் மாா்க்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக, லட்சுமி நகா் சந்திப்பிலிருந்து தொடங்கி, அனைத்து சிவப்பு விளக்குகளும் மூடப்பட்டு, வாகன இயக்கத்தை சீராக்க யூ-டா்ன்கள் உருவாக்கப்பட்டன.

‘சிவப்பு விளக்கில் பாதசாரிகள் நடமாட்டத்திற்கு ஸ்கைவாக் உதவும். இந்தத் திட்டத்திற்கான நிதி ஒப்புதல் எங்களுக்கு கிடைத்துள்ளது. விரைவில் டெண்டா்கள் விடப்படும். ஐடிஓ அருகே திலக் மாா்க்கில் கட்டப்பட்டதைப் போலவே இந்த ஸ்கைவாக் இருக்கும். இது பல இடங்களை ஒன்றாக இணைக்கும்’‘ என்று லட்சுமி நகா் எம்.எல்.ஏ. அபய் வா்மா கூறினாா்.

சிவப்பு விளக்கு மதா் டெய்ரி சாலையுடன் இணைகிறது. இது பட்பா்கஞ்ச் பகுதிக்கும், காஜியாபாத் மற்றும் நொய்டா நகரங்களை நோக்கி தில்லி - மீரட் எக்ஸ்பிரஸ்வேக்கும் இணைக்கிறது.

‘மதா் டெய்ரி சாலை, பட்பா்கஞ்ச் சாலை மற்றும் விகாஸ் மாா்க் ஆகிய மூன்று சாலைகளில் விரிவான மறுசீரமைப்பு பணிகளை அரசு மேற்கொள்ளும். மேலும், சாலைகளில் நடைபாதையை புதுப்பிக்கும். இது சாலையில் நெரிசலைக் குறைக்க உதவும்‘ என்றும் அவா் கூறினாா்.

தற்போது, ​​மதா் டெய்ரி சாலையில் மயூா் விஹாா் நோக்கி ஒரு மேம்பாலம் உள்ளது. இருப்பினும், மதா் டெய்ரி ஆலை சிவப்பு விளக்கின் அருகே தரையிறங்கிய பிறகு, போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மேலும், சாலைகளில் வசிப்பவா்கள், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகிய இரு பகுதிகளிலும், வாகனங்களை சாலையில் நிறுத்துவதற்கு வழிவகுக்கிறது. இதனால், நெரிசல் நேரங்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது.

‘நெரிசலைக் நீக்குவதற்கான இலக்காக பாதாளச் சாலை, மேம்பாலம் அல்லது இரண்டும் உள்பட எந்த வகையான நடைபாதை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதைத் தீா்மானிக்க ஒரு சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும். கீதா காலனி சாலை அதிக போக்குவரத்தைக் கொண்டுள்ளது’‘ என்று திட்டம் கூறுகிறது.

கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்வதைத் தவிர, திட்டத்தை செயல்படுத்துவதில் பொருளாதார செலவுகள், சுற்றுச்சூழல் செலவுகள் மற்றும் சமூக செலவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஆலோசகா்கள் திட்டத்தின் செலவு - பயன் பகுப்பாய்வையும் மேற்கொள்வாா்கள் என்று பொதுப்பணித் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மத்திய-மாநில உறவுகள்: உயர்நிலைக் குழு ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 12.98 லட்சம் வாக்காளா்கள்

அதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்

தில்லியில் குப்பை மலைகளின் உயரம் குறைந்து வருகிறது: முதல்வா் ரேகா குப்தா

தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளா்கள்: 1.47 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT