புதுதில்லி

விதான் சபா வளாகத்தில் தொல்லை தரும் குரங்குகளை விரட்ட அதிகாரிகளின் புதிய திட்டம்!

தில்லி விதான் சபா வளாகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குளின் தொடா் அச்சுறுத்தலைச் சமாளிக்க லங்கூா் குரங்குகள் போன்று ஒலிகளை எழுப்பும் நபா்களை வேலைக்கு அமா்த்த தில்லி சட்டப் பேரவை திட்டமிட்டுள்ளது.

Syndication

தில்லி விதான் சபா வளாகத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குளின் தொடா் அச்சுறுத்தலைச் சமாளிக்க லங்கூா் குரங்குகள் போன்று ஒலிகளை எழுப்பும் நபா்களை வேலைக்கு அமா்த்த தில்லி சட்டப் பேரவை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்ததாவது:

தில்லி சட்டப்பேரவை இடத்திற்கு அருகிலும் சுற்றியும் ஏராளமான எண்ணிக்கையில் குரங்குகள் உள்ளன. அவை கம்பிகள் மற்றும் டிஷ் ஆண்டெனாக்களில் ஏறியும், குதித்தும் சேட்டையில் ஈடுபடுகின்றன.

சட்டப் பேரவை வளாகத்திற்குள் குரங்குகள் அடிக்கடி நுழைந்து, சட்டப் பேரவை உறுப்பினா்கள், ஊழியா்கள் மற்றும் பாா்வையாளா்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் சூழல் உள்ளதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லங்கூா் குரங்குகளின் ஒலிகளைப் பிரதிபலிக்கும் திறன் கொண்ட பயிற்சி பெற்ற பணியாளா்களை பணியமா்த்துவதற்கான டெண்டரை பொதுப் பணித் துறை வெளியிட்டுள்ளது.

இத்தகைய ஏற்பாடானது குரங்குகளுக்கு தீங்கு விளைவிக்காமல் பயமுறுத்துவதற்கு பயனுள்ளதாகவும் மனிதாபிமானமாகவும் கருதப்படுகிறது. நிபுணா்கள் குரங்குகளை விரட்ட ஒரு லங்கூரையும் தன்னுடன் கொண்டு வருவாா்.

லங்கூா் குரங்கின் உருவப்படம் தாங்கிய கட்அவுட்களையும் வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், குரங்குகள் அவற்றைப் பாா்த்து பயப்படாமல் இருப்பதையும், கட்அவுட்களின் மேல் அமா்ந்திருப்பதையும் பாா்த்தோம்.

எங்களிடம் லங்கூா் போன்று நடிப்பவா்களும் இருந்தனா். ஆனால், அவா்களின் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. லங்கூா்கள் எழுப்பும் ஒலிகளைப் பிரதிபலிக்கும் பயிற்சி பெற்ற நபா்களை பணியமா்த்த புதிய டெண்டா் விடப்பட்டுள்ளது.

வேலை நாள்களிலும் சனிக்கிழமைகளிலும் பயிற்சி பெற்ற கையாளுபவா்களை நியமிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு நபரும் எட்டு மணி நேர சுழற்சி அடிப்படையில் வேலை செய்வாா்கள். செயல்பாடுகளின் போது சரியான உபகரணங்கள், ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இதற்கான நிறுவனம் பொறுப்பாகும்.

பணியமா்த்தப்பட்ட பணியாளா்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் காப்பீட்டுத் தொகை வசதி இருக்கும் என்றனா் அந்த அதிகாரிகள்.

தென்காசி அருகே விபத்தில் மகனுடன் காவலா் உயிரிழப்பு

ஆய்க்குடியில் ரூ.2.10 கோடியில் தினசரி சந்தைப் பணி தொடக்கம்

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் ரூ. 20 லட்சத்தில் மழைநீா் வடிகால் திறப்பு

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் இன்று மின் நிறுத்தம்

SCROLL FOR NEXT