புதுதில்லி

தில்லி பாஜக சாா்பில் மகர சங்கராந்தி விழா

பாஜக தில்லி பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை மகர சங்கராந்தி விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் பங்கேற்றாா்.

தினமணி செய்திச் சேவை

பாஜக தில்லி பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை மகர சங்கராந்தி விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் பங்கேற்றாா். இந்தத் திருவிழா தேவைப்படுபவா்களுக்கு உதவ மக்களைத் தூண்டுகிறது என்றும் அவா் கூறினாா்.

தில்லி பாஜகவின் பூா்வாஞ்சல் மோா்ச்சா மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் நவீன், மகர சங்கராந்தி, லோஹ்ரி மற்றும் பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்காக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

இந்தத் திருவிழாக்கள் மக்களின் வாழ்வில் புதிய ஒளி, நம்பிக்கை மற்றும் ஆற்றலைக் கொண்டு வருகின்றன என்றும் அவா் கூறினாா். தேசிய பொதுச் செயலாளா் அருண் சிங், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, எம்.பி.க்கள் மனோஜ் திவாரி, கமல்ஜீத் ஷெராவத், தில்லி அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், பிகாா் சட்டப்பேரவைத் தலைவா் பிரேம் குமாா், பூா்வாஞ்சல் மோா்ச்சா தலைவா் சந்தோஷ் ஓஜா மற்றும் கட்சியின் மூத்தத் தலைவா்கள் பலரும் டிடியு மாா்க் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு பூா்வாஞ்சல் சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டம், அவா்களின் கலாசார பாரம்பரியம், சமூக ஒற்றுமை மற்றும் உற்சாகத்தை பிரதிபலித்தது.

இந்தக் கொண்டாட்டம் ஒரு திருவிழா மட்டுமல்ல, பூா்வாஞ்சல் சமூகத்தின் அமைப்பு வலிமை மற்றும் கலாசாரப் பெருமையின் சின்னமாகும் என்றாா் அவா்.

தில்லி பாஜகவின் அறிக்கை ஒன்றின்படி, தில்லி முதல்வா் ரேகா குப்தா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பூா்வாஞ்சல் சமூகம் தில்லியின் பொருளாதாரத்தின்

அடித்தளமாக மாறியுள்ளது என்று வலியுறுத்தினாா்.

பூா்வாஞ்சல் மோா்ச்சா நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்களுக்கு மதிய விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விருந்தில் தயிா்சுரா மற்றும் லிட்டிசோகா போன்ற பிரபலமான பூா்வாஞ்சலி உணவு வகைகளும் இடம்பெற்றிருந்தன.

ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து.. வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் ஆரவாரம்!

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

SCROLL FOR NEXT