புதுதில்லி

பொங்கல் கொண்டாட்டம்: பிரதமர் மோடியுடன் "பராசக்தி' திரைப்படக் குழுவினர் பங்கேற்பு

"பராசக்தி' தமிழ்த் திரைப்படக் குழுவினர், தேசியத் தலைநகரில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபர்

"பராசக்தி' தமிழ்த் திரைப்படக் குழுவினர், தேசியத் தலைநகரில் புதன்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துகொண்டனர்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பராசக்தி படக் குழுவினர் பிரதமரைச் சந்தித்தனர். அப்போது, பொங்கல் வாழ்த்துகளை பிரதமருக்குத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிரதமரைச் சந்திப்பது எப்போதும் ஒரு பெருமையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக உள்ளது. தில்லியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டம் நாட்டின் ஒற்றுமை குறித்த ஒரு செய்தியாகும்' என்றார்.

இணை நடிகர் ரவி மோகன் கூறுகையில், "பிரதமர் மோடியின் ஆளுமையால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அவர் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். இந்த விழாவில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேசியத் தலைநகரின் மையத்தில் இத்தகைய ஒரு அழகான நிகழ்வு நடைபெற்றது அனைத்துத் தமிழர்களுக்கும் ஒரு பெரிய கெüரவமாகும்' என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது "எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "தில்லியில் நடைபெற்ற பொங்கல்}2026 கொண்டாட்டத்தில், நமது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் முன்னிலையில் திருவாசகம் இசைக்கப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.

பராசக்தி திரைப்படம், 1960-களில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காட்சிப்படுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT