திருநெல்வேலி

முடங்கிப்போன பிரம்புத் தொழில்!

தென்காசி, அக். 29:: பிரம்பு பொருள்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, விற்பனை வரி போன்றவற்றால் பிரம்பு பொருள்கள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து

பா.​ பிரகாஷ்

தென்காசி, அக். 29:: பிரம்பு பொருள்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, விற்பனை வரி போன்றவற்றால் பிரம்பு பொருள்கள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

  தென்காசி, பிரானூர் பார்டர் மற்றும் செங்கோட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பிரம்பு தொழிற்சாலைகளை நம்பி உள்ளனர். பிரம்பு மூலம் வீட்டிற்குத் தேவையான நாற்காலிகள், டைனிங் டேபிள், மேஜைகள், டி.வி. ஸ்டான்ட், உள்ளிட்ட பொருள்கள் செய்யப்படுகின்றன.

  நவீன வீட்டை அலங்கரிக்கும் வகையில் ஷோபா செட், மெத்தைகள் என வந்தாலும் பிரம்பினால் செய்யப்படும் பொருள்களின் விலையோடு ஒப்பிடும்போது, அவற்றின் விலை மிகவும் அதிகம்.

  ஆனால், பிரம்பிலான செட் குறைந்தது ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை வாங்கலாம். இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு செய்யப்படும் டோலிகள் மிகவும் பிரபலம்.

  சபரிமலையில் வயது முதிர்ந்தோரும், நடக்க முடியாதவர்களும் டோலியில் தூக்கிச் செல்லப்படுவார்கள். அந்த டோலிகள் இங்கிருந்துதான் விற்பனை செய்யப்படுகின்றன. சபரிமலை சீசன் காலத்தில் மட்டும் இங்கு 500-க்கும் மேற்பட்ட டோலிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

  தற்போது, பிரம்பினால் செய்யப்படும் பொருள்களின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், குறைந்த லாபம், அதிக முதலீடு, தொழிலாளர் பற்றாக்குறை, மற்றும் மூலப் பொருள்களின் விலை உயர்வால் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலை நடத்த இயலாமல் திணறுகின்றனர்.

  தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பிரம்புகளை எடுப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

  அசாம் மாநிலத்தில் பிரம்புகள் அதிகளவில் காணப்படுகின்றன. கோல்கத்தாவில் தான் பிரம்புகள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒருமுறை இங்கிருந்து ஒரு லாரியில் பிரம்புகளை கொள்முதல் செய்வதற்கு ரூ.5 லட்சம் வரை ஆகும்.

  போக்குவரத்து செலவு மட்டும் ரூ. 50 ஆயிரமாகும்.

  இதுதவிர, அங்கு 4 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது.

  தற்போது, மலேசியாவிலிருந்து சென்னைக்கு வெள்ளை நிற மூங்கில்கள் மற்றும் கட்டுநார் இறக்குமதி செய்யப்படுகின்றன.

  பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், இந்தியாவில் விளையும் மூங்கிலுக்கு இணையாகாது என்கின்றனர் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்.

  கோல்கத்தாவிலிருந்து இங்கு கொண்டு வந்து பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலம் உற்பத்தி விலை அதிகரிக்கிறது. மேலும், தற்போது இங்கு இத் தொழில் தெரிந்தவர்கள் இல்லாததால் தொழிலாளர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது.

  1971-ம் ஆண்டு, கதர் கிராம தொழில்வாரியம் மூலமாக செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியில் பிரம்பு மற்றும் மூங்கில் தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது.

  கூட்டுறவு சங்கத்தின் மூலம், கேரளம் மற்றும் செங்கோட்டை பகுதிகளிலுள்ள மேஸ்திரிகள் மூலம் தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

  பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு, ஊராட்சி ஒன்றியத்திலிருந்து ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின்கீழ் மாதம் ரூ. 500 வழங்கப்பட்டது. தற்போது இந்த பயிற்சி மையம் செயல்படவில்லை.

  இதுகுறித்து, செங்கோட்டை விஸ்வநாதபுரம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இத் தொழிலில் ஈடுபட்டு வரும் தி.கணபதி (76) கூறியதாவது:

  பிரம்பு பொருள்கள் உற்பத்தி கைத்தொழிலாகும்.

  பிற கைத் தொழில்களுக்கு விற்பனை வரி கிடையாது. ஆனால், தமிழகத்தில் மட்டும் வரி விதிக்கப்படுகிறது.

  எனவே, இதற்கு விற்பனை வரியை தளர்த்த வேண்டும்.

  மூலப் பொருளான பிரம்புகளை தமிழக அரசே கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  இதன்மூலம் இங்கு இத் தொழில் புத்துயிர் பெறும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT