முகப்பு
திருநெல்வேலி

குழித்துறை ஆற்றில் ஆண் சடலம்

களியக்காவிளை, ஜன. 8: குழித்துறை அருகே தாமிரபரணி ஆற்றில் மிதந்துவந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  குழித்துறை அருகே பாலவிளை, முளமூட்டுவிளையில் தாமிரபரணி ஆற்றில

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

களியக்காவிளை, ஜன. 8: குழித்துறை அருகே தாமிரபரணி ஆற்றில் மிதந்துவந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 குழித்துறை அருகே பாலவிளை, முளமூட்டுவிளையில் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை பகுதியருகே, சனிக்கிழமை காலையில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது.

 இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸôர் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

 இறந்தவர் சிவப்பு நிற சட்டை அணிந்திருந்தார். அவரது சட்டைப் பையில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை மேற்கொண்டதற்கான சீட்டு இருந்தது. அதில் அனில்குமார், கிளிமானூர் என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.

 அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 சடலம் குழித்துறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என போலீஸôர் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →