முகப்பு
திருநெல்வேலி

மக்கள் நலப்பணியாளர் தற்கொலை: தலைமறைவான ஊராட்சித் தலைவர் கைது

சுரண்டை, ஜன.8: வீரகேரளம்புதூர் அருகே மக்கள் நலப்பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர் ஜானை (42) போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  வீரகேரளம்புதூர் அருகேயுள்ள ராஜக

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

சுரண்டை, ஜன.8: வீரகேரளம்புதூர் அருகே மக்கள் நலப்பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர் ஜானை (42) போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 வீரகேரளம்புதூர் அருகேயுள்ள ராஜகோபாலப்பேரி ஊராட்சியில் மக்கள் நலப்பணியாளராகப் பணியாற்றி வந்தவர் அருமைராஜ் (30). இவர் நவ.12-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

   அவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஊராட்சி மன்றத் தலைவர் ஜான் மற்றும் ஊராட்சி உதவியாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மீது வீரகேரளம்புதூர் போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.

   இதையடுத்து தலைமறைவான இருவரில் ஊராட்சி உதவியாளர் நவநீதகிருஷ்ணன் கடந்த மாதம் போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.

   இந்நிலையில், வெள்ளிக்கிழமை சுரண்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் தலைமையிலான போலீஸôர் வீராணம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.   

     அப்போது வீராணம் கருவந்தா விலக்கில் நின்று கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ஜானை போலீஸôர் கைது செய்து செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →