முகப்பு
திருநெல்வேலி

சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்

திருநெல்வேலி, ஜன. 8:திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் "ஆன்லைன்' மூலம் கல்லூரி கட்டணங்களை செலுத்தும் வசதியை இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை த

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

திருநெல்வேலி, ஜன. 8:திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் "ஆன்லைன்' மூலம் கல்லூரி கட்டணங்களை செலுத்தும் வசதியை இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை துணைவேந்தர் இரா.தி. சபாபதி மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வசதியை தமிழ்நாடு சமூக நல வாரியத் தலைவி கவிஞர் சல்மா தொடக்கி வைத்தார்.அதன் செயல்பாடுகள் குறித்து இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் என். மெய்யப்பன் விளக்கினார்.

இந்த வசதி மூலம் இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் சுமார் 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் தங்கள் பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைகள் மூலம் நேரடியாக கல்விக் கட்டணங்களை செலுத்தலாம்.நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் ச. மாணிக்கம், இந்தியன் வங்கியின் பல்கலைக்கழக கிளை மேலாளர் பொன்னாயிரம், மண்டல கணினி பிரிவு அலுவலர் சுந்தர்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.