தென்திருப்பேரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை
திருநெல்வேலி, ஜன. 8: தென்திருப்பேரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் கு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தென்திருப்
திருநெல்வேலிதென்திருப்பேரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை
திருநெல்வேலி, ஜன. 8: தென்திருப்பேரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் கு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தென்திருப்
திருநெல்வேலி, ஜன. 8: தென்திருப்பேரை வட்டாரத்தில் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் கு.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
தென்திருப்பேரை வட்டாரத்தில் அரசு மானியத் திட்டத்தில் பங்கு பெற்று பயனடைய விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்த அடையாள அட்டையை விவசாயிகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நில சர்வே எண் அத்தாட்சியுடன் வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
இல்லையெனில் தங்களது கிராமங்களில் நடைபெறும் முகாமில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
அடையாள அட்டையை கொண்டு விவசாயிகள் மானிய விலையில் இடுப் பொருள்களை பெற்றுச் செல்லலாம் என்றார் கிருஷ்ணன்.