முகப்பு
திருநெல்வேலி

பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் வீடுகள் அமைக்கும் பணி தீவிரம்

குலசேகரம், ஜன. 8:  கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.     பேச்சிப்பாறை அணை அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தம

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

குலசேகரம், ஜன. 8:  கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுகள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    பேச்சிப்பாறை அணை அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பு அமைத்து வசித்து வந்தவர்களின் குடியிருப்புகள் மற்றும் ரப்பர் உள்ளிட்ட பயிர்களை அழித்து விட்டு அப்பகுதியில் சமத்துவபுரம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டன.

     இங்கு  266 சதுர அடி கொண்ட நூறு வீடுகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் பெரும்பகுதி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.

மேலும் மண் சீரமைப்புப் பணிகளும், நுழைவு வாயில் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

     இந்தப் பணிகள் வரும் பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

இந்த சமத்துவபுரம் அமைப்பதற்காக அப்புறப்படுத்தப்பட்ட குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படாததால் அவர்களில் சிலர் சாலையோரத்தில் வீடு கட்டி வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சமத்துவபுரத்தில் வீடுகள் மற்றும் நிலங்களை இழந்த குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →