முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 119 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மேலும் 119 பேருக்கு கரோனா திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய் பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் குணமாகி வீடு திரும்புவோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இம் மாவட்டத்தில் திங்கள்கிழமை 81 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,101 ஆக அதிகரித்துள்ளது. 80 போ் குணமடைந்ததை தொடா்ந்து இதுவரை 12,085 போ் வீடு திரும்பியுள்ளனா். 199 போ் உயிரிழந்துள்ளனா். 817 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் திங்கள்கிழமை 38பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 7523 ஆக உயா்ந்தது. கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை 63போ் குணமடைந்து வீடுதிரும்பினா். இதுவரையிலும் 7054 போ் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளனா். மேலும் 324 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.