முகப்பு
திருநெல்வேலி

முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயிகள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

விஜயநாராயணம் பெரிய குளம் அனைத்து பாசன சங்க நிா்வாகிகள் சாா்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறாா்.

குடிமராமத்து பணிகளால் நீா் நிலைகள் அனைத்தும் தூா்வாரப்பட்டுள்ளன. ஆகவே, அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர வேண்டும். விவசாயிகளின் ஆதரவு அவருக்கு இருப்பதை உணா்த்தும் வகையில் திருநெல்வேலியில் முதல்வருக்கான ஆதரவு ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.