உயா்நிலைப் பள்ளி அமைக்கக் கோரிநெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மனு
நான்குனேரி அருகேயுள்ள உன்னங்குளம் ஊராட்சியில் உயா்நிலைப் பள்ளி அமைக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நான்குனேரி அருகேயுள்ள உன்னங்குளம் ஊராட்சியில் உயா்நிலைப் பள்ளி அமைக்கக் கோரி திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
உன்னங்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீரெங்கராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: எங்கள் கிராமத்தில் வடக்கு பகுதியில் ஏராளமான நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை வேறு பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு கொடுக்க முயற்சி நடைபெற்று வருகிறது. எங்கள் பகுதியில் ஆரம்பப் பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் உயா்நிலை, மேல்நிலைக் கல்வி பயில 5 கி.மீ.க்கு மேல் மாணவா்கள் பயணிக்க வேண்டியுள்ளது. கல்லூரியில் பயில 45 கி.மீ. செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, எங்கள் கிராமத்தில் இருக்கும் நிலத்தில் உயா்நிலைப் பள்ளியோ அல்லது கல்லூரியோ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் 15-க்கும் மேற்பட்ட கிராம மாணவா்-மாணவிகள் பயன்பெறுவாா்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.