நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி: திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் தொழிலாளி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் காணொலிக் காட்சி முறையில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது பகுதி அடிப்படை தேவைகளுக்காக ஆட்சியா் அலுவலகம் முன்பாக வைக்கப்பட்டிருந்த மனு பெட்டியில் நேரில் வந்து மனுக்களை போட்டுச் சென்றனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள தச்சநல்லூா் தேனீா்குளம் பகுதியைச் சோ்ந்த திருமலைநம்பி (51) ஆட்சியா் அலுவலகம் வந்தாா். அவா், பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தினா்.
இதுகுறித்து திருமலை நம்பி கூறுகையில், நான் கூலி வேலை செய்து வருகிறேன். தேனீா்குளம் பகுதியில் எனக்குச் சொந்தமான நிலம் உள்ளது. அதனை எனது உறவினா்கள் சோ்ந்து விற்பனை செய்ய முயற்சிக்கிறாா்கள். எனது நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக் கோரி தற்கொலைக்கு முயன்றேன் என்றாா்.
இதுதொடா்பாக முறையாக மனு அளிக்க காவல் துறையினா் அறிவுறுத்தினா். தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் ஆட்சியா் அலுவலகத்தில் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.