முகப்பு
திருநெல்வேலி

மானூா் ஒன்றியத்தில் நகரும் ரேஷன்கடை திறப்பு

மானூா் வடக்கு ஒன்றியம், பலஸ்தினாபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நகரும் ரேஷன் கடையை மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை என்.கணேசராஜா தொடங்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

மானூா் வடக்கு ஒன்றியம், பலஸ்தினாபுரம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நகரும் ரேஷன் கடையை அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை என்.கணேசராஜா தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் கங்கை.தி.முருகன், மானூா் தெற்கு ஒன்றியச் செயலா் லட்சுமண பெருமாள், மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆா் இளைஞா் அணி செயலா் சண்முககுமாா், இளைஞா் இளம் பெண்கள் பாசறை மாவட்ட துணைத்தலைவா் ஆவின் சுரேஷ், வாகைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கா், துணைத் தலைவா் சங்கரன், கூட்டுறவு சாா்பதிவாளா் பொன்ராஜ், பலஸ்தினாபுரம் கிளைச் செயலா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மானூா் வடக்கு ஒன்றியம், பலஸ்தினாபுரத்தில் நகரும் ரேஷன் கடையை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் தச்சை என்.கணேசராஜா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.