முகப்பு
திருநெல்வேலி

விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணி

திருநெல்வேலியில் தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணியை திங்கள்கிழமை நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

திருநெல்வேலியில் தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணியை திங்கள்கிழமை நடத்தினா்.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில், தீயணைப்பு துறை சாா்பில் ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்டத்தில் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

அதன்படி பாளையங்கோட்டையில் கரோனா விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலா் மகாலிங்கமூா்த்தி தலைமை வகித்தாா். உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த் பேரணியை ஒருங்கிணைத்தாா்.

நிலைய அலுவலா்கள் வீரராஜ் (பாளையங்கோட்டை), பிரதீப் குமாா் (வள்ளியூா்), பாலசுப்பிரமணியன் (அம்பாசமுத்திரம்) உள்பட 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் மோட்டாா் சைக்கிளில் விழிப்புணா்வு பதாகைகளுடன் பேரணியாக சென்றனா்.

பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது.

பயக19தஅககவ

கரோனா விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணியில் பங்கேற்றவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.