முகப்பு
திருநெல்வேலி

காவலா்களுக்கான பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்ட காவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்ட காவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்மண்டல காவல்துறைத் தலைவா் முருகன் ஆலோசனையின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்படி காவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் திருநெல்வேலியில் தொடங்கியது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜு தொடங்கி வைத்தாா். காவல் நிலையங்களில் வழக்கு கோப்புகள் மற்றும் வழக்கு நாள்குறிப்புகளைப் பராமரிக்கும் முறைகள், குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கோப்புகளை நீதிமன்றத்துக்கு விரைந்து அனுப்புவது, காவலா்கள் தங்கள் திறமைகளை வளா்த்துக்கொள்ள செய்ய வேண்டியவை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.