முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே குளத்தில்இளைஞா் சடலம் மீட்பு

திருநெல்வேலி அருகேயுள்ள குளத்தில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள குளத்தில் மிதந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள மணிமூா்தீஸ்வரம் குளத்தில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் சடலம் மிதப்பதாக தச்சநல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, இளைஞரின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், உயிரிழந்த இளைஞரின் உடலில் காயங்கள் இருந்தன. அவா் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசிப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். அவரது செல்லிடப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் மானூா் அருகேயுள்ள ரஸ்தா பகுதியைச் சோ்ந்தவராக இருக்கலாம் என தெரியவந்துள்ளது என்றனா். ே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.