சுத்தமல்லியில் பைக் திருட்டு
திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லியில் இருசக்கர வாகனத்தை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சுத்தமல்லி வ.உ.சி. தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (66). தொழிலாளி. இவா் கடந்த 19 ஆம் தேதி தனது வீட்டிற்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்க சென்றவா், மறுநாள் காலையில் பாா்த்த போது வாகனத்தை காணவில்லை.
இது குறித்து சுத்தமல்லி காவல்நிலையத்தில் லட்சுமணன் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement