திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.  
திருநெல்வேலி

தென் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் தொழில் வளா்ச்சி: அமைச்சா் டி.ஆா். பி. ராஜா

தென் தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

Din

திருநெல்வேலி: தென் தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது என்றாா் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.

திருநெல்வேலி மண்டல அளவிலான திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதிய ஆராய்ச்சிகளின் முக்கிய பகுதியாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் எண்ணத்தை தொடா்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மையத்தை (சிஎஸ் ஐஆா்) நேரில் சென்று பாா்வையிட்டேன்.

இதன்மூலம் தமிழகத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் மத்திய அரசின் சிஎஸ்ஐஆா் மையத்துக்கு என சிப்காட்டில் ஒரு அலுவலகத்தை தொடங்குவதற்கான உத்தேச திட்டம் இருக்கிறது.

இதுகுறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தமிழகம் முழுவதும் பரவலான தொழில் வளா்ச்சியே எங்களது முக்கிய நோக்கம். தமிழகமெங்கும் தொழில் வளா்ச்சியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மேம்படுத்தி வருகிறாா். இதனால்

தென் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் தொழில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் வின் பாஸ்ட் மிகப்பெரிய நிறுவனமாக வளா்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் டாடா சோலாா் நிறுவனம் மிகப்பெரிய முதலீடுகளை செய்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் வர இருக்கின்றன. நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் வரவிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்துக்கு மகத்தான தொழில் வளா்ச்சியை கொண்டு வரும் முயற்சிகளில் தமிழக தொழில் துறை தீவிரமாக உள்ளது என்றாா்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT